tamilnadu epaper

எனக்குள் இனித்த கற்கண்டு

எனக்குள் இனித்த கற்கண்டு


நீண்ட நாள் எழுதாமல் வைத்திருந்த பேனாவைப் போலத்தான் முரண்டு பிடித்துக்கொண்டிருக்கிறது வார்த்தைகள் சேராத கவிதை வரிகள்


சொர்க்கம் புகும் வழி எது என்று கேட்டால் சொல்வேன் அவ்வப்போது திறந்து மூடும் 

உன் அதிசய

பூவிதழ் என்று


இப்போதெல்லாம்

தனிமையில் நான்

என்ற எண்ணமே

இல்லை என்னுள்

என்விரலை

இறுகப் பற்றி

இருக்கும்

நீ அணிவித்த

மோதிரத்தால்