tamilnadu epaper

எர்​ணாகுளம் விரைவு ரயி​லில் 5 கிலோ கஞ்சா பறி​முதல்

எர்​ணாகுளம் விரைவு ரயி​லில் 5 கிலோ கஞ்சா பறி​முதல்

சென்னை:

எர்ணாகுளம் விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 5 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.


திருவொற்றியூர் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீஸார் நேற்று முன்தினம் மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கூடூர், கொருக்குப்பேட்டை வழியாக எர்ணாகுளம் நோக்கி செல்லும் ரயில் வந்தது.


இந்த ரயிலின் பொதுப் பெட்டியில் ரயில்வே போலீஸார் கண்காணித்தபோது, அதில் ஒரு பை கேட்பாரற்றுக் கிடந்தது. அந்தப் பையை திறந்து பார்த்தபோது, அதில் 5 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.1 லட்சம். இந்த கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து ரயிலில் கடத்தி வரப்பட்டன, அதைக் கொண்டுவந்த நபர் யார் என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.