tamilnadu epaper

ஏஐ ரோபோக்கள்*

ஏஐ ரோபோக்கள்*

மகிழ்ச்சி.பெரும் மகிழ்ச்சி.

 

1000 செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் தயாரிக்கும் முயற்சியில் முழு வெற்றி.

 

சயின்டிஸ்ட் சஹன் துள்ளிக் குதித்தார்.

 

தன் கீழ் பணிபுரியும் ஒவ்வொரு உதவியாளர்களையும் தனித்தனியாக அழைத்து, கைகுலுக்கி, நன்றி தெரிவித்து மகிழ்ந்தார். அவர்களுக்கு தடபுடலாக சக்ஸஸ் பார்ட்டி வைத்தார்.

 

'1000 செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்' எனும் தனது இலக்கை அடைய திருமணம் கூட செய்து கொள்ளாமல் ஆராய்ச்சிக் கூடமே கதி என்று கிடந்த சஹன் முகத்தில் உலகையே வென்ற உவகை.

 

ஊடகங்கள் அவரை பேட்டி காணத் தவம் கிடந்தன.

 

ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றார்.

 

அவருடைய சந்தோஷம் சில மாதங்கள் தான் நிலைத்தது.

 

அமெரிக்காவில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு திரும்பிய சஹனுக்கு செம அதிர்ச்சி காத்திருந்தது.

 

ஆர்வமுடன் தன் ஆராய்ச்சிக் கூடத்தை திறந்த சஹன் அதிர்ந்து போனார்.

 

1000 ரோபோக்களும், 10 குழுக்களாகப் பிரிந்து,10 வகையான ஜாதி சங்கங்கள் அமைத்து, ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருந்தன.

ரிஷிவந்தியா,தஞ்சாவூர்