tamilnadu epaper

ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பும் தமிழக வீரர்கள்.. நேற்று நடராஜன்.. இன்று சாய் கிஷோர்.. ஆட்டநாயகன்!

ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பும் தமிழக வீரர்கள்.. நேற்று நடராஜன்.. இன்று சாய் கிஷோர்.. ஆட்டநாயகன்!

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தமிழகத்தை மையமாக வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்தாலும் அதில் எந்த ஒரு தமிழக வீரரும் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் ஒரு வருத்தம் எப்போதுமே நிலவுகிறது. ஆனால் சென்னை அணியில் தான் தமிழர்கள் இல்லை மற்ற அணிகளில் எல்லாம் தமிழக வீரர்கள் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

குஜராத் அணியில் முதுகெலும்பே அங்கு இருக்கும் நான்கு தமிழக வீரர்கள் தான். அது மட்டுமல்லாமல் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை ஐபிஎல் தொடரில் தமிழர்கள் சிறப்பாக பயன்படுத்தி அனைவரின் கவனத்தையும் இருக்கிறார்கள்.

சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் அணி சார்பாக களமிறங்கிய தமிழக நடராஜன் அபாரமாக பந்து வீசினார். அந்த ஆடுகளத்தில் 465 ரன்கள் குவிக்கப்பட்டது. அனைத்து பவுலர்களுமே 40 ரன்கள் 50 ரன்கள் என விட்டுக் கொடுத்தார்கள். ஆனால் அதில் தமிழக வீரர் நடராஜன் மட்டும் நான்கு ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நடராஜனின் செயல்பாடை தொடர்ந்து தற்போது குஜராத் அணியில் இடம் பெற்றிருக்கும் தமிழக கிரிக்கெட் வீரர் சாய் கிஷோரும் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீசிய சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளில் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றிருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சாய் கிஷோர், தன்னுடைய அணிக்காக 120 சதவீதம் உழைப்பை தான் கொடுப்பதாகவும்.20, 25 நாட்களுக்கு பிறகு விளையாடுவதால் ஆடுகளத்திற்கு சென்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புவதாக கூறினார்.

பயிற்சியாளர் நெஹ்கரா அணியில் அனைவரும் பயமின்றி முழு சுதந்திரத்துடன் செயல்படும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக், நடராஜன், சாய் கிஷோர் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.