tamilnadu epaper

ஒன்னுமே வரல

ஒன்னுமே வரல


காலை எழுந்ததில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தாள் உஷா. கேட்கவும் தயக்கமாக இருந்தது.


மூனாவது படிக்கும் பையன் ராகுல் அரை மணிக்கொரு முறை வாசல் கதவை திறப்பதும் எட்டி பார்த்து மூடுவதுமாக இருந்தான்.


சரி என்னதான் நடக்குதுன்னு பாப்போம். கத்திரிக்கா முத்துனா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகனும் என்று சமையல் வேலையில் மூழ்கி விட்டாள்.


என்ன சமையல் என்று கேட்டுக்கொண்டே கடைத்தெருவில் இருந்து காய்கறிகளுடன் வந்த கணவன் முரளியிடமிருந்து பைகளை வாங்கி டைனிங் டேபிளில் வைத்துவிட்டு ஏங்க இன்னிக்கு வத்தக்குழம்பு வைக்கட்டுமா என்றாள். அதற்கு கணவன் இல்லை சாம்பார் வை. அதுவும் அரைச்சு விட்டு கம கம வென வை. கடைக்கு போய் வந்ததே பெரிய வேலையா இருக்கு. ஏப்ரல் வருடப்பிறப்பு ஆயிருக்கு, வெயில் பயங்கரமா இருக்கு என்றான்.


அதற்குள் ஹாலில் இருந்து சத்தம் கேட்க போய் பார்த்தால் ராகுலை பாட்டி ஏண்டா அந்த கதவு கையோட வரனுமா? பேசாம வந்து உட்கார் என அதட்டிக்கொண்டிருந்தார்.


முரளி இடையில் பூந்து என்னடா ஆச்சு என கேட்க, பாட்டிக்கு தெரியாமல் மெதுவாக யுஎஸ்லேருந்து அக்கா எனக்கு நேத்து வீடியோ கால்ல சொன்னா, அதான் கொரியர் வரதான்னு பாத்தேன் என்றான்.


ராகுல் இங்க வா ன்னு அடுத்த ரூமுக்கு தனியா கூட்டிட்டு போய், யூஎஸ்லேருந்து வருனும்னா ஒரு வாரமாவது ஆகும்டா! பொறுமையா இரு என்றார்.


ஒரு வாரம் சென்ற பின் காலிங் பெல் அடிக்க கதவை திறக்க சென்றான் ராகுல். அப்பா கம்பெனி ஆள் யாரோ‌ வந்திருப்பதை பார்த்து கடுப்பில் திரும்பினா பாட்டி பின்னாடியே வந்து என்னடா வந்தது என நச்சரிக்க சுத்தமான குரலில் *ஒன்னுமே* வரலைன்னு கத்த, சமையல் கட்டிலிருந்து வந்த உஷா டேய் ராகுல் பாட்டிட்ட என்ன சண்டை வா உள்ளே என சமையல் ரூம் கூட்டிச் சென்று நீ பாட்டியிடம் *ஒன்னுமே* வரலைன்னு சொன்னது என் காதில் விழுந்தது. பாட்டிக்கு என்ன தெரியும். எங்கிட்ட கேட்டுருக்கலாம் தானே. 


இன்னும் இரண்டே நாள்தான் வந்துடும் என கூறி அவனை ஒரு வழியாக சமாதானப்படுத்தினாள்.


இரண்டு நாள் ஓடினது காலண்டரில் தேதி கிழிக்கும் போது *உழைப்பாளர்* *தினம்* என பார்த்தவுடன் தான் நினைவுக்கு வர, ரூமுக்கு போனால் பையன் தூங்கிக் கொண்டிருந்தான். அவனை ராகுல் ராகுல் என எழுப்பி டேய் *வரலைன்னயே* வந்துடுச்சு டா என எழுப்ப ராகுல் துள்ளி குதித்து எழுந்து எங்கம்மா பார்சல் என கேட்க, என்னது பார்சலா? நீ இரண்டு நாளைக்கு முன் *ஒன்னுமே* வரலையேன்னயே! இன்னிக்கு தான்டா *ஒன்னு* *மே* *உழைப்பாளர்* *தினம்* என கூற, இடையில் புகுந்த முரளி அடியே அவன் கொரியரோ அஞ்சலக பார்சலோ *ஒன்னுமே* வரலைன்னு எங்கம்மா கிட்ட சொன்னத நீ தப்பா புரிஞ்சிகிட்டு அலப்பறை குடுக்கறயே என கூற அதை புரிந்து மூவரும் சிரிக்க, சத்தம் கேட்டு பாட்டி *என்னடா* *சத்தம்* என அருகில் வர‌ மூவரும் எஸ்கேப்.


-லால்குடி வெ நாராயணன்

CHENNAI -600 127