புதுடெல்லி, மார்ச் 30–
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகம், ஒரே நாடு ஒரே துறைமுக நடைமுறை திட்டத்தை தொடங்கியுள்ளது. துறைமுகங்களை வரைபடமாக்குதல், துறைமுக நடைமுறைகளை தரப்படுத்துதல், ஆவணப்படுத்துதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் பாதைகள் அமைச்சகம் தேசிய கடல்சார் தளவாட இணையதளம் மூலம் துறைமுக செயல்முறைகள் மற்றும் ஆவணங்களின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.
புதிய துறைமுகங்கள், முனையங்கள் மற்றும் கப்பல் நிறுத்தும் தளங்களை உருவாக்குதல், நவீனமயமாக்கல், இயந்திரமயமாக்கல், டிஜிட்டல் மயமாக்கல், சாலை, ரயில் போக்குவரத்துடன் இணைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட கடல்சார் துறையில் துறைமுகங்களின் செயல்திறன் மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று மக்களவையில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரி வித்தார்.