அன்றெவரோ
வயல் வரப்பில்
நம்பி நட்ட மரம்
ஒன்றே ஆயினும்
நல்ல பலன் தரும்
தென்னை மரம்!
நிழல் இளநீர்
தேங்காய் ஓலை என
தன்னால் ஆனதை
வஞ்சனை இன்றி
வாரி வழங்கிடும்
தென்னை மரம்!
பண்ணைக் கோர்
அடையாளமாய்
நெடிது நிற்கும்
தென்னை மரம்!
வயல் வழியே
நடப்போர்ககும்
வழிதவறிப்
போவோர்க்கும்
வழிகாட்டும்
தென்னைமரம்!
அன்புடன்,
KMD..முத்துக்குமார்,
மைசூர்.09.04.25.