tamilnadu epaper

ஓய்வு

ஓய்வு


தட்டி வேய்ந்த 

   கூரை வீடு 

கட்டில் போட்டுக்

   காலாற ஓய்வு...

எட்டிப் பார்த்து 

   யார்வந் தாலும் 

கிட்டச் சேர்க்கும் 

   கிராம வாழ்க்கை ...

பண்ணைக் குள்ளே 

    அமைந்த தாலே

எண்ணற்ற வசதி 

    எடுத்தாள இங்குண்டு!

சின்னப் பையனும்

     சுவரோரம் சாய்ந்து

இன்னும் வேடிக்கை 

     எங்கேயோ பார்க்கிறான்!



-வைரமணி 

சென்னை