பல் சுவை களஞ்சியம் பகுதிக்கு ரிஷிகேஷில் இருந்து நமது நிருபர் ரெ. சுப்பா ராஜூ. 14.2.2025. கங்கை நதியின் கொடை ***************&************ உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷில் இருந்து தேவ பிரயாக் செல்லும் வழியில் கங்கை ஆற்றின் கரையில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளிக்கான விளையாட்டு மைதானமாக கங்கை நதியின் ஓரத்தில் உள்ள மணல் திட்டு இயற்கையாக அமைந்துள்ளது. அந்த மணல் திட்டே மாணவர்களுக்கான விளையாட்டு மைதானமாக அமைந்துள்ளது. மழைக்காலத்தில் நதியின் பெரும் நீரோட்டத்தில் மணல் திட்டு மூழ்கிவிடும். மற்ற காலங்களில் வழக்கமாக மாணவர்கள் விளையாட இயற்கை அளித்த கொடையாக கங்கை நதியின் மணல் திட்டு உள்ளதை பார்ப்பதற்கு வியப்பாக உள்ளது. By ரிஷிகேஷில் இருந்து நமது செய்தி நிருபர் ரெ. சுப்பா ராஜூ.