இங்கிலாந்தில் உள்ள மார்கேட் கடற்கரையில் நடைபயிற்சி செய்த தம்பதி, ஒரு விசித்திரமான, எலும்புக்கூடு போன்ற பொருளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நியூயார்க் போஸ்ட்டின் படி, இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதியினர் பௌலா – டேவ் ரீகன். ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அதில், இவர்கள், கடந்த மார்ச் 10 ஆம் தேதி கென்ட்டின் மார்கேட்டில் கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, இந்த மர்மமான எலும்புக்கூடு போன்ற உருவம் (Mermaid-like skeletal creation) அவர்களின் கவனத்தை ஈர்த்தது. இது ஒரு மீன்வால் கொண்ட, மனித உருவம் போன்று காணப்படும் மரச்சிற்பம் போல இருந்ததாகவும், அதன் தோற்றம் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
மர்மமான உயிரினம் ஓரளவு மணலில் புதைந்து கடற்பாசியால் சூழப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. இது ஒரு மீனின் வால் மற்றும் வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் செதுக்கப்பட்ட மர உயிரினமாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். “என் வாழ்க்கையில் இதைப் பற்றித் தெளிவாகச் சொல்ல முடியாது. இது மிகச் சுவாரஸ்யமான, விசித்திரமான ஒன்றாக இருந்தது,” என்று பௌலா ரீகன் கூறினார் என New York Post தெரிவித்துள்ளது. முதலில், இது ஒரு மரத்துண்டு (driftwood) அல்லது இறந்த கடல் உயிரினம் (dead seal) போல் தோன்றியது, ஏனெனில் அதன் வால் மற்றும் இறக்கைகள் சற்றே விசித்திரமாக இருந்தன,” என்று பௌலா ரீகன் நினைவுகூர்ந்தார்.
“தலையைப் பார்த்தால், அது எலும்புக்கூடு போன்றதாக இருந்தது. ஆனால் பின்புறம் – மீனின் வால் இருக்கும் பகுதியில் – அது மிருதுவாகவும் அழுத்தினால் நெகிழ்வாகவும் (squishy) இருந்தது. அது ஒட்டியோ அல்லது அழுகியோ இருக்கவில்லை, ஆனால் கண்டிப்பாக விசித்திரமாக இருந்தது,” என்று பௌலா ரீகன் தெரிவித்தார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றனர்.
பௌலா ரீகன் மேலும் கூறுகையில், “இந்த புதிரான உருவத்தை சுற்றி சிறிய கூட்டம் ஒன்று கூடியது, ஆனால் யாரும் இதை உண்மையில் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை.” “சிலர் இது ஒரு படகிலிருந்து விழுந்திருக்கும் என்று நினைத்தனர், மற்றவர்கள் இது ஒரு கப்பலின் முன்பகுதியை அலங்கரிக்கும் செதுக்கப்பட்ட மீனவரமகள் (mermaid figurehead) போன்ற ஒன்றாக இருக்கலாம் என்று கூறினர். நாம் புகைப்படம் எடுத்திருக்கவில்லை என்றால், யாரும் நம்மை நம்ப மாட்டார்கள் என்பதை எனக்குத் தெரியும்,” என்று பௌலா ரீகன் தெரிவித்தார்.