கடலூர், ஏப்.10 -
திருச்சோபுரத்தில் ரூ.51,50,000 வாங்கிக் கொண்டு திருப்பி தராமல் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடலூர் முதுநகரை சேர்ந்த வேல்முருகன் மனைவி உமாராணி டி ஐ ஜி யிடம் மனு கொடுத்தார். அதில் தனது கணவர் சிங்கப்பூரில் எலக்ட்ரிஷன் வேலை செய்து வந்ததாகவும், தற்போது மீன்பிடித் தொழில் செய்து வருவதாகவும், எனக்கு பழக்கமான திருச்சோபுரத்தைச் சேர்ந்த அனிதா என்பவர் திருச்சோபுரத்தில் ரத்த பரிசோதனை லேப் நடத்தி வருகிறார். அவருடைய மாமா மகன் சுந்தர் வெட்டிவேர் மற்றும் முந்திரி வியாபாரம் செய்து வருவதாகவும், மேலும் லேப் விரிவாக்கிற்கு உங்களது பணத்தை கொடுத்தால் உங்களை பார்ட்னராக சேர்த்து அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார் . இதனை நம்பி 8 தவணைகளில் ரூபாய். 51,50,000 கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட உமாராணி என்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக தெரிந்து அவரது வீட்டுக்கு சென்று கேட்டபோது பணத்தை கொடுக்க முடியாது என கூறி மிரட்டி வருவதாகவும் நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனுவில் தெரிவித்திருந்தார். கடலூர் மாவட்ட குற்ற பிரிவில் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ரமேஷ் மனைவி அனிதா (வயது 34) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.