tamilnadu epaper

கரிசக்காட்டுப்பூவே

கரிசக்காட்டுப்பூவே


கரிசக்காட்டுப் பூவே -என் 

கனவே நீ தானடி !

உன் வெட்கம் காணத் தானடி -என் 

குழந்தை மனசு ஏங்குதடி !

மயில் போல கால் ரெண்டும் 

மழை பெய்யாமலே

அழகாய் தான் ஆடுதடி!

நீ சீலை கட்டும் அழகை பார்க்கத்தான் 

வானவில் வானில் தோன்றுதடி !

மிளிரும் உன் மூக்குத்திக்காகத் தானடி 

வானில் நிலவும் தோன்றுமடி 

உன் காதில் குலுங்கும் ஜிமிக்கி 

கும்கியாய் வந்து என் உயிரை கொல்லுதடி.

சிரித்தால் அழகு

சிணுங்கினால் அழகு 

முறைத்தால் அழகு -நீ  

முறைப்பெண்ணாக வந்தால் அழகிலும் அழகு !

என்னவளே என்ன சொல்லுவேன் 

எப்படி சொல்வேன் ?

நீ தான் என் பொண்டாட்டியாக வர வேண்டுமென்று !


-லி.நௌஷாத் கான்