எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த அரபு உச்சிமாநாட்டில் பாலஸ்தீனர்களை வலுக் கட்டாயமாக வெளியேற்றும் டிரம்பின் திட்டத்தை எதிர்க்க காசாவை மறுகட்டமைப்பு செய்யும் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாலஸ்தீனர்களை வலுக்கட்டாயமாக துரத்துவதற்காக அவர்களை பட்டினியில் தள்ளுவதையும் நிலத்தை அழிப்ப தையும் இம்மாநாடு கண்டித்துள்ளது. மேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களை செயல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி யுள்ளது.