tamilnadu epaper

குடவாசல் ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

குடவாசல் ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

குடவாசல் ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம் மூலங்குடி, பருத்தியூர்,மேலப்பிடாகை, பெரும்பண்ணையூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம். பி. இளவரசன் முன்னிலை வகித்தார். முன்னதாக குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் பாப்பா சுப்பிரமணியன் வரவேற்றார். ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகளில் 41 வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்களை சந்தித்து கள ஆய்வு நடத்தினர். அப்போது முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பேசுகையில், இன்றைய அரசியல் சூழ்நிலைகள் அதிமுக விற்கு சாதகமாக உள்ளது. அதனை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். என்றார். இந்த கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், துணைத் தலைவர் தென் கோவன், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.