திருவண்ணாமலை மாவட்டம் 18.5.2025 கீழ்பென்னாத்தூர் வட்டம் வேட்டவலம் அடுத்த நெய்வாநத்தம் கிராமத்தில் நடந்த ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் செத்தவரை ஸ்ரீ ல ஸ்ரீ சிவ ஜோதி மௌன சித்தர் ஐயா அவர்கள் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றியும் சிறப்பு ஆராதனையும் செய்தனர் கும்பாபிஷேக விழாவில் மாண்புமிகு தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ.எஸ் ஆறுமுகம் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.