tamilnadu epaper

குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா

குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா


தமிழர்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்குப் பொதுவாகப் பதினாறாம் நாள் அல்லது முப்பதாம் நாள் பெயர் சூட்டு விழாவினை நடத்துவர். இந்த விழாவை நாமகரணம் என்று பலரால் அழைக்கப்படுகிறது. குழந்தையின் உடல் நிலையையும் தாயின் உடல் நிலையையும் கருத்தில் கொண்டு இப்பெயர் சூட்டும் விழா உறுதி செய்யப்படும். பதினாறு அல்லது முப்பது நாட்களில் பெரும்பாலான தாயும் சேயும் உடல்நலம் தேரிவிடுவதனால் இவ்விழாவினைப் பதினாறாம் நாள் செய்துவிடும் வழக்கத்தினை நம் முன்னோர் கொண்டுள்ளனர்.


நாம்கரணை விழாவை பத்தாவது நாளுக்குப் பிறகும், குழந்தையின் முதல் பிறந்தநாளுக்கு முன்பும் எப்போது வேண்டுமானாலும் திட்டமிடலாம்.


 குழந்தைப் பிறந்தால் பதினாறு நாட்களுக்கோ அல்லது முப்பது நாட்களுக்கோ தீட்டு, அதனால் இறைவழிபாட்டையும் திருக்கோவிலுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்று சிலர் குறிப்பிடுவர். குழந்தையின் உடல் நலத்தையும் தாயின் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டே அவ்வாறு கூறப்படுகின்றது. குழந்தையினாலோ அல்லது குழந்தைப் பெற்றத் தாயினாலோ இறைவனுக்குத் தீட்டு ஏற்படுவதில்லை என்பதே உண்மை! இறைவன் குழந்தையின் உயிரிலும் தாயின் உயிரிலும் இமைப்பொழுதும் நீங்காது பிரிப்பின்றி இருத்தலினால் இறைவனை விலக்கி வைப்பது என்பது இயலாத ஒன்று என்று தெளிதல் வேண்டும். தவிர உயிர்களினால் இறைவனுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாது என்பதும் தெளிய வேண்டிய ஒன்றாகும். 


பிறந்த குழந்தையைப் பொதுமக்கள் வருகின்ற திருக்கோவிலுக்குத் தூக்கிச் சென்றால் நோய் எதிர்ப்பு ஆற்றல் இன்னும் வலுப்பெறாமல் இருக்கும் குழந்தைக்குப் பல்வேறு நோய்களும் கிருமிகளும் தீங்கு விளைவிப்பதற்கு வாய்ப்பு உண்டு என்று கருதியே தாயும் சேயும் இக்காலத்தின் போது திருக்கோவிலுக்குச் செல்வதனை வேண்டாம் என்றனர்.


மிக முக்கியமாக, இந்த சடங்கு குழந்தைக்கு ஒரு அடையாளத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் ஒரு குழந்தைக்கு பெயரிடும் போது ஒலியின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்கிறது. ஜென்ம நட்சத்திரத்தின்படி ஒரு குழந்தையின் பெயருக்கு மிகவும் பொருத்தமான எழுத்துக்களால் பெயரிடப்படுகிறது.


பெயரிடும் விழா ஆலயங்களிலோ இல்லது வீட்டிலோ நடத்தப்படுகிறது. முதலில் விநாயகரையும் பிறகு குலதெய்வத்தையும் வழிபாட்ட பிறகு பிறகு

 அரிசியை ஒரு தட்டில்

பரப்பி அதில் குழந்தையின் தந்தை ஒரு தங்க மோதிரத்தால் குலதெய்வத்தின் பெயரையும் பின்னர் பிறந்த குழந்தையின் பெயரையும் அதில் எழுதுகிறார். தந்தை இல்லாத நேரத்தில் தாத்தா அல்லது மாமா சடங்குகளைச் செய்யலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பெயரை தந்தை ஒரு பிரார்த்தனையுடன் குழந்தையின் வலது காதில் மூன்று முறை கிசுகிசுப்பார். சில குடும்பங்களில், குழந்தையின் அத்தை (தந்தையின் சகோதரி) குழந்தையின் பெயரைக் காதுகளில் கிசுகிசுப்பார், அதைத் தொடர்ந்து அது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அறிவிக்கப்படும்.


குழந்தை தனது பரம்பரை, குடும்பம் மற்றும் மூதாதையர்களுடன் இணைவதற்கு பெயர் சூட்டும் முறை முதல் படியாகும். இந்த விழா குடும்பம் மற்றும் நண்பர்களின் வட்டத்தில் ஒற்றுமை மற்றும் ஒற்றுமை உணர்வைக் கொண்டுவருகிறது, ஏனெனில் குழந்தை ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துக்களையும் பெறுகிறது.


 *விழாவின் முக்கியத்துவம்* 


1. குழந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான சுத்திகரிப்பு சடங்கு.குழந்தைக்கு ஒரு அடையாளமும் குடும்பத்துடன் தொடர்பும் வழங்கப்படுகிறது.

2. குழந்தை குடும்பப் பரம்பரையில் வரவேற்கப்பட்டு, குடும்பப் பெயரால் அடையாளம் காணப்படுகிறது.

3. .குழந்தைக்கு முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும். 

4. நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது மற்றும் எதிர்மறையை ரத்து செய்கிறது.


தமிழ்ச் சைவர்களின் வரலாற்றில் பெயர்களுக்குத் தனி இடம் உண்டு. சுந்தர மூர்த்தி அடிகளின் திருப்பெயரைச் சொல்லியே பெருமிழலைக் குறும்பர் எனும் அடியவர் நற்பேறு பெற்றார் என்பதாலும் திருநாவுக்கரசு அடிகளின் பெயரைச் சொல்லியே அப்பூதி அடிகளின் குடும்பமே நற்பேறு பெற்றது என்பதாலும் நல்ல, பொருள்தெரிந்த, மேன்மையுடைய தமிழ்ப் பெயர்களைத் தமிழ்க் குழந்தைகளுக்கு இடுவது தமிழ்ச் சைவர்களின் கடமையாகும். தமிழ்ச் சைவர்கள் இறைவனின் தமிழ்த் திருப்பெயர்களையும் வாழ்ந்து பேறு பெற்ற நல்லடியார்களின் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சான்றோர்களின் திருப்பெயர்களையும் நல்லொழுக்கம் மிக்க தமிழ்த் தலைவர்களின் பெயர்களையும் தமிழ்க் குழந்தைகளுக்குச் சூட்டினால், அத்திருப்பெயர்களின் தன்மைக்கு ஏற்ப அக்குழந்தைகள் சீருடனும் சிறப்புடனும் விளங்குவார்கள் என்று நம்முன்னோர் அறிவுறுத்தி உள்ளனர். நம் குழந்தைகள், தமிழ் இனமான உணர்வு உள்ளவர்களாகவும் தமிழர் பண்பாட்டையும் தமிழ் மொழியையும் தொடர்ந்து நிலை நிறுத்துகின்ற தமிழ்ச் செல்வங்களாகவும் எதிர்காலத்தில் விளங்க வேண்டும் என்றால், தமிழ்ச் சைவர்களான நாம், நம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிட்டு நம் அடையாளத்தை நிலைநாட்டுவோம்! தமிழராய் வாழ்வோம்! இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!


-சிவ.முத்து லட்சுமணன்

போச்சம்பள்ளி