[08:26, 10/25/2024] Tamilnadu Epaper: வாசலில் வந்தமர்ந்த
வண்ணத்துப்பூச்சிக்கு
என்ன தரலாம் ? - என்று
எண்ணிக்கொண்டிருந்த போதுதான்
கண்ணில் பட்டது
வாசலில் போடப்பட்டிருந்த
வண்ணக்கோலம்….
மாக்கோலம் என்றாலும் -அது
பூக்கோலமென்பதால்
வந்தமர்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சிக்குத்
தெரிய -கொஞ்ச நேரமாகலாம்
அதில் வாசனையோ தேனோ இல்லை என்று
ஆயினும் அதன் நுகர் நுண் உணர்வுக்குத்
தெரிந்திருக்க வேண்டும்
கோலமிட்ட ஒரு பெண்ணின் கைமணமும்
மன மதுவும் !
**********
கவிஞர் ம.திருவள்ளுவர்