tamilnadu epaper

கோவிந்தா… கோவிந்தா… முழக்கத்துடன் பக்தர்கள்: திருப்பதி திருமலையில் தங்க தேரோட்டம் தொடங்கியது

கோவிந்தா… கோவிந்தா… முழக்கத்துடன் பக்தர்கள்: திருப்பதி திருமலையில் தங்க தேரோட்டம் தொடங்கியது

ஆந்திரா:

திருப்பதி திருமலை கோயில் தங்க தேரோட்டம் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பொதுவாகவே நாள் தோறுமே திருவிழாக்கள் நடைபெறும். அதே போல் ஒரு ஆண்டுக்கு 450க்கும் மேற்பட்ட விழாக்கள் நடைபெறும். குறிப்பாக வருடாந்தர , நவராத்திரி பிரமோச்சவம் என இரு பிரமோச்சவம் நடைபெறும். இந்த நிலையில் தற்போது வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது.


வசந்த காலம் முடித்து கோடைகாலம் தொடங்குவதை ஒட்டி ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறும் இந்த விழா நேற்று தொடங்கி இன்று இரண்டாவது நாளாக தங்க தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மலையப்ப சாமி 4 மாட வீதிகளிலும் தற்போது உலாவந்து அருள்பாலித்து வருகிறார். அதே போல் தங்கத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இந்த 4 மாட வீதிகளிலும் பக்தர்கள் குவிந்து கோவிந்தா.. கோவிந்தா என பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்டவைகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.


இந்த வசந்த உற்சவத்தின் 3வது நாளான நாளை ஸ்ரீ கிருஷ்ணர், பாமா ருக்மணி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட சாமிகள் நாளை 4 மாட வீதிகளில் வீதிஉலா வர உள்ளனர். 10.04.2025 தொடங்கிய வசந்த உற்சவம் நாளையுடன் முடிவடைகிறது. இதில் வசந்த மண்டபத்திற்கு தங்க தேரில் எழுந்தருளிய மலையப்ப சாமி வசந்த மண்டபத்திற்கு சென்று அங்கு திருமண்டபத்தில் முடிந்து அதன் பின்பு கோயிலுக்கு சென்றடையும். கோடைகாலத்தை தணிப்பதற்காக வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது.