tamilnadu epaper

சங்கமங்களின் சங்கமம்

சங்கமங்களின் சங்கமம்


நதிகளின் 

சங்கமம் 

கடலினில்

கண்டேன்!


துதிகளின் 

சங்கமம் 

ஆலயத்தில் 

கண்டேன்!


மலர்களின் 

சங்கமம் 

மங்கையில்

கண்டேன்!


வண்ணங்களின் சங்கமம் 


வானவில்லில் கண்டேன்!


எண்ணங்களின் சங்கமம்


கவிதையில்

கண்டேன்!


கனிகளின் 

சங்கமம்

கன்னியிடம் 

கண்டேன்!


இதயங்களின்

சங்கமம்

காதலில் 

கண்டேன்!


காதலின் 

சங்கமம்

மழலையில்

கண்டேன்!


ஒளிகளின் 

சங்கமம்

விடியலில் 

கண்டேன்!


பகலிரவுப்

பொழுதுகளின்

சங்கமம்

செவ்வானத்தில்

கண்டேன்!


ஒலிகளின் 

சங்கமம்

இசையினில் கண்டேன்!


உரிமைகளின்

சங்கமம்

ஜனநாயகத்திடம் கண்டேன்!


நட்பின் 

சங்கமம்

முகநூலில் 

கண்டேன்!


உயிர்களின் 

சங்கமம்

கூடலில்

கண்டேன்!


மௌனங்களின் சங்கமம்

மயானத்தில் கண்டேன்!


பாசங்களின்

சங்கமம்

தாய்மையில் கண்டேன்!


பெண்மையின் சங்கமம்

நாணத்தில் 

கண்டேன்!


சங்கமங்களின் சங்கமம்

படைத்தவனின் கைவண்ணம்


இன்னுமுண்டு 

ஏராளம்!

எடுத்து சொன்னால் பேரின்பம்!!


-ரேணுகா சுந்தரம்