திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்காபுரி வட்டத்தில் உள்ள வி.கிடையப்பட்டியில் மாகாளி கோவில் அருகில் முட்புதர்களுக் கிடையே சிலைகள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மணப்பாறை அரசு கல்லூரி தமிழ்த் துறை தலைவர் அ.செல்வராசு தலை மையில் தமிழ்த்துறை மாணவர்கள் குண சேகரன், ராஜேஷ்வரன் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கி ருந்த சிலை சமண தீர்த்தங்கரர் சிலை என்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து பேராசிரியர் அ.செல்வராசு கூறுகையில், “முட்புதர் அருகே சிலை இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்று மேற்கொண்ட ஆய்வில், வெளியில் தெரியும் ஒரு சிலை மட்டுமின்றி முட்புதருக்குள் மற்றொரு சிலை இருப்பதையும் கண்டறிந் தோம். முட்புதருக்குள் சிதைந்த நிலையில் காணப்படும் சிலை ஆணா, பெண்ணா என்று அறிய முடியாத நிலையில் சிதைந் துள்ளது. தமிழகத்தில் சமண, பௌத்த சமயம் வீழ்ச்சியடைந்து வைதீக சமயங்கள் செல்வாக்கு பெற தொடங்கிய காலக் கட்டத் தில், சமண, பௌத்த சமயத்தை சார்ந்த சிலை கள் மறைக்கப்பட்டன அல்லது தூக்கி வீசப்பட்டன என்பது வரலாறு. மேற்கண்ட சிலைகள் காணப்படும் இடத்தில் சமண மடம் இருந்ததற்கான கற்தூண்களும் கற்பல கைகளும் இன்றும் சிதைந்து காணப்படு கின்றன. பெரும்பாலான பகுதி மண்ணுக்குள் புதைந்துள்ளன. அவற்றை சீர் செய்தால் 10-க்கு 20 அளவிலான மடம் இருந்திருப்பதை கண்டுபிடித்து விடலாம். இந்த சிலைகள் காணப்படும் இடத்திற்கு அருகே இன்று மாகாளி கோவிலும், விநாயகர் கோவிலும் உள்ளன. நின்ற வடிவில் இருக்கும் பெண் தீர்த்தங்கரர் சிலை இரு கரங்களை உடைய தாக உள்ளது. இவ்வாறு சிலை வடிக்கும் முறை பழமையானது. எனவே இந்த சிலை கள் கி.பி. 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டாக இருக்க வேண்டும். இங்கு கிடைத்திருக்கும் இதே வடி விலான சிலைகள் விழுப்புரம் மாவட்டத்தி லும் முன்பே கண்டறியப்பட்டுள்ளன. மணப்பாறை பகுதி குன்றுகள் நிறைந்த பகுதி யாகும். எனவே சமண, பௌத்த சமய தீர்த்தங்கரர்கள் இப்பகுதியில் மிகுதியாக வாழ்ந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தமிழகத்தில் வைதீக கோவில்கள் கட்டப்பட்டு இருக்கும் இடங்களுக்கு அருகே சமண, பௌத்த சமய எச்சங்கள் பல இடங்க ளில் கண்டறியப்பட்டுள்ளன. அதுபோன்ற சான்றுகளே இச்சிலைகள் ஆகும். தமிழக அரசு இவ்வாறு கண்டறியப்படும் சிலைகளை அந்தந்த இடங்களிலேயே வைத்து பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.