விருதுநகர், மே 24–
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 107 பயனாளிகளுக்கு அரசாணைகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவியருக்கான சாதிச் சான்றிதழ், வருமானவரி சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என வருவாய்த்துறை ஊழியர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. எந்தவித சிரமுமின்றி ஒரு வாரத்திற்குள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்
அதன் அடிப்படையில் ஒரு வாரத்திற்குள் அணைத்து விதமான சான்றிதழ்களும் பள்ளிகள், இ-சேவை மையங்களில் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ மாணவியர் சான்றிதழ் பெறுவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் சம்பந்தப்பட்ட தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு வந்தால் வேண்டிய உதவிகள் செய்யப்படும். இ-சேவை மையத்தில் மாணவ மாணவியர் சான்றிதழ் பெற முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.