சென்னை, மார்ச் 2
சிட்டி யூனியன் வங்கி (சி.யூ.பி.), முன்னணி தனியார் வங்கி, சென்னை சூப்பர் கிங்க்ஸ் (சி.எஸ்.கே.) உடன் இணைந்து புதிய கிரெடிட் கார்டை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த கடன் அட்டை மூலம், சி.எஸ்.கே. ரசிகர்கள், தங்கள் கிரிக்கெட் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு தனிப்பட்ட சலுகைகளை பெறுவர் என்று சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்.காமகோடி தெரிவித்தார்.
இந்தப் புதிய சிட்டி யூனியன் வங்கி - சென்னை சூப்பர் கிங்க்ஸ் புதிய கடன் அட்டையானது, சிட்டி யூனியன் வங்கியின் வங்கித் துறை அனுபவத்தையும், சி.எஸ்.கே.வின் உற்சாகத்தையும் ஒருங்கே கொண்டுவருவதோடு, நிதித் துறை நெகிழ்வுத்தன்மை, வெகுமதிகள், ரசிகர்களே உண்டான எல்லையில்லா அனுபவத்தையும் வழங்குகிறது.
இந்தகடன்அட்டையின்முக்கிய பயன்கள்: பிரத்யேக சி.எஸ்.கே. டிசைன் : தங்கள் கடன் அட்டையில் சி.எஸ்.கே.வின் தனித்துவமான மஞ்சள் வண்ணம் மற்றும் சிங்க சின்னத்தைக் காணலாம். இது அவர்களுடைய அணியின் மீதுள்ள ஈடுபாட்டைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.
பிரத்யேக வெகுமதிகள் திட்டம் : இந்தக் கடன் அட்டை வைத்திருப்பவர்கள், அட்டகாசமான வெகுமதிகளைப் பெறுவார்கள். அதோடு, சி.எஸ்.கே. தொடர்பான பொருட்களை வாங்கினாலோ, போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளை வாங்கினாலோ கூடுதல் போனஸ் புள்ளிகளைப் பெறுவார்கள். மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் சிறப்பு நிகழ்ச்சிகள், ரசிகர் சந்திப்புகள் மற்றும் ஏராளமான இதர பயன்களையும் ரசிகர்கள் பெறுவார்கள்.
சிறப்பு சி.எஸ்.கே. பொருட்களுக்கான ஆஃபர்: சி.எஸ்.கே. ரசிகர்கள் தங்கள் அணியின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக பல்வேறு சி.எஸ்.கே. தொடர்பான பொருட்களை வாங்கும்போது, அதற்கென பிரத்யேக கழிவுகளும் ஆஃபர்களும் வழங்கப்படும்.
கூடுதல் பாதுகாப்பு வசதி
சிட்டி யூனியன் வங்கியின் மிகத் திறமையான பாதுகாப்பு வசதிகள், அதாவது, தொடுதல் இல்லா செலுத்தும் வசதி, பாதுகாப்பான இணையப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, சி.எஸ்.கே. ரசிகர்கள், பொருட்களை வாங்கலாம், பயணம் மேற்கொள்ளலாம். எல்லாவற்றையும் மனநிம்மதியுடன் செய்யலாம்.
வெகுமதி அதிகம்
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தைப் பற்றி, வங்கியின் மேலாண் இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான என்.காமகோடி கூறுகையில், “எங்கள் ரசிகர்களுக்கு மிக நவீனமாக கிரெடிட் கார்டை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது சென்னை சூப்பர் கிங்க்ஸின் உற்சாகத்தையும், சிட்டி யூனியன் வங்கியின் நிதிச் சேவைகளையும் ஒருங்கிணைத்து வழங்குகிறது. இந்த அட்டை வெறும் நிதிச் சேவைகளை மட்டும் வழங்கவில்லை. மாறாக, சி.எஸ்.கே. குடும்பத்தின் ஒரு பகுதியினருக்கு பிரத்யேகமான வெகுமதிகளை வழங்குவதோடு, மறக்கவியலாத அனுபவத்தையும் ஏற்படுத்தித் தரப் போகிறது” என்றார்.
ஸ்பான்சரிங் ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டது தொடர்பாக சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநரான விஜய் ஆனந்த், “ சி.எஸ்.கே.வுடன் ஏற்பட்டுள்ள இந்த ஒருங்கிணைப்பின் மூலம், சி.யூ.பி. வாடிக்கையாளர்கள், சி.யூ.பி & சி.எஸ்.கே. லோகோவை கொண்டு மஞ்சள் வண்ண கோ பிராண்டட் கடன் அட்டையைப் பெறுவார்கள். இது வங்கி மற்றும் சி.எஸ்.கே. அணிக்கும் பலன் தரக்கூடியதாக அமையும்,” என்றார்.
சி.எஸ்.கே.வின் தலைமைச் செயல் அதிகாரியான கே.எஸ். விசுவநாதன், “சிட்டி யூனியன் வங்கியோடு கைகோப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தக் கோபிராண்டட் கடன் அட்டையின் மூலம், எங்களுடைய ரசிகர்கள் கூடுதல் பலன்களைப் பெறுவதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளோம். இந்தக் கூட்டணி நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று நம்புகிறோம்,” என்றார்.