இன்றோடு போகட்டும் துன்பங்கள்.
இன்பத்தை தரட்டும் சித்திரை திங்கள்.
இழந்ததைப் பெற்று தரட்டும் சித்திரை திருநாள்.
வருடத்தில் ஒரு நாள் வசந்தம் வந்து நிக்குது வாசலில்.
சித்திரை என்னும் முதல் நாள் சிந்தையைக் கவரும் தமிழனின் நன்னாள்.
ஆதித்தமிழன் நாங்கள் அன்பை மட்டும் அள்ளி வந்தோம் இந்நாளில்.
தமிழை மூச்சாக்கி உயிர் எழுத்தை உயிராய் மாற்றி.
அன்று ஒரு இனிய வேளையில் உதயமான என் தமிழ்.
அகிலத்தை ஆளும் மூத்த தமிழ் என்றும் உயர்வாகும்.
சித்திரை மகளே வா.
சிந்தை இனிக்க வா.
சிறைகளை உடைத்தெறிய வா.
சிகரம் தொடு நீ வா.
சீர்மிகு அன்பு கொண்டு.
சித்திரை முதல் நாளில் தரணியில் நல்லதை விதைக்க வா.
வா சித்திரை மகளே வா...
சிவகங்கை
வீ.கருப்பையா பாவை...