சதுரங்க
'அரசியல்'
விளையாட்டில் கூட
இல்லை
ஒரு
'அரசியல்...'
கறுப்பு
காய்களும்
வெள்ளை
காய்களும்
இரண்டும்
சமம்தான்...
சுண்டாட்டம்
விளையாட்டில்
மட்டும்...
ஏனிந்த
அரசியல்...
சிகப்பு
நிற காய்க்கு
ஐந்து புள்ளிகள்...
வெள்ளை
நிற காய்களுக்கு
இரண்டு புள்ளிகள்...
கறுப்பு
நிற காய்களுக்கு
மட்டும்
ஒரே ஒரு
புள்ளி தான்...
அரசியல்
இல்லாத
விளையாட்டில்
அல்லவா
ஆடுது
அரசியல்...
சுண்டாட்டம்
ஆட்டம்
அல்ல...
இது
சு(ர)ண்டல்
ஆட்டம்...
-ஆறுமுகம் நாகப்பன்