tamilnadu epaper

சித்திரையே வருக

சித்திரையே வருக


சிந்தனை பல கொண்டு

சீர்மிகு வாழ்க்கை தனை

சிறப்புடனே நடத்திச் செல்லும்

சங்கத்தமிழ் கண்ட மக்களுக்கு

வளம் கொடுக்க வந்திடும்

சித்திரையே வருக !!


முத்தமிழை முன் கொண்டு

முன்னோர்கள் வழி நின்று

முயற்சி தனை தானெடுத்து

வெற்றி நோக்கும் மக்களை

பற்றி நலம் காத்திடும்

சித்திரையே வருக !!


தமிழ் புத்தாண்டு வணக்கத்துடன்


-கோ.தனபாலகிருஷ்ணன்

தஞ்சாவூர்