கண்களை

      இழந்தவனும்

      வாழ்கிறான்..."


      கால்களை

      இழந்தவனும்

      வாழ்கிறான் ..."


 " />

tamilnadu epaper

சில நிமிடம் பொறுமை இல்லை

சில நிமிடம் பொறுமை இல்லை


   " கண்களை

      இழந்தவனும்

      வாழ்கிறான்..."


      கால்களை

      இழந்தவனும்

      வாழ்கிறான் ..."


     கைகளை 

     இழந்தவனும்

     வாழ்கிறான்...."


     காதலை

     இழந்தவனும்

     வாழ்கிறான் ...."


      மனைவியை

      இழந்தவனும்

      கணவனை

     இழந்தவனும்

     குழந்தையை

     இழந்தவனும்

     வாழ்கிறான் ..."


     உறவை

     இழந்தவனும்

     வீட்டை

     இழந்தவனும்

     வாழ்கிறான் .... "


     பிச்சை 

     எடுப்பவனும்

     மூன்றாம்

     பாலினத்தவரும்    

     வாழ்கிறான் ..."


      எல்லாம்

      இருந்தும்

      மனத்தை

      இழந்தவன்

       மட்டும்

      தற்க்கொலை

      என்ற கொடிய

      மரணத்தை

      நாடுகிறான் ..."


      சிந்திக்க சில

      நிமிடம் இல்லை

      அவனுக்கு

      அவசரம்

      கல்லறையில்

      உறக்கம்

      தேடுகிறான் ... "


   - சீர்காழி. ஆர். சீதாராமன் .