சம்பாஷணைகள் பலவிதம்
ராத்திாி பாத்தேங்க எல்லாரும் பேசிக்கிட்டுருந்தோம் !
நல்ல மனுஷங்க காலைல உங்களுக்கு தரவேண்டிய பணம் கொன்டுவரேன்னு சொல்லிட்டுப்போனாரே சந்தடி சாக்கில் சொல்லி வச்சாா்எதுக்கும் யூஸ் ஆகலாமே!
கடைசில பாத்தா நைட்டே முடிஞ்சிடுச்சாம்
சே என்ன நேரம் பாருங்க மனுசன் வாழ்க்கை! எதுவுமே நிரந்தரம் இல்லீங்க ! அதற்குள் குறுக்கே ஒரு நண்பர் பாடி எப்ப எடுக்கறாங்களாம் ? ராத்திாி நண்பர்கள் பேசிவிட்டு பிாியும்போது நல்ல நபர் காலையில் .....பினம்
நடுவில் நின்ற நபரோ சரி சரி டீ சொல்லவா
போய் ஒரு மாலையை போட்டுட்டு. வந்துடலாம் ஒரு கடமை முடிஞ்சது
அடுத்தநபர் வாயைத்திறக்கும் டேன் அந்தம்மாவுக்கு இனிமேல நிம்மதிதான் மனுசன் உயிரோடு இருந்தவரை படாத பாடுபடுத்திட்டாரே ரொம்ப சந்தேகப் போ்வழியோ?
ஆமாம் ஆமாம்இது ஐந்தாமவர்,
இது பக்கத்து வீட்டு நண்பரோட அவசர வாய்ஸ்
இல்ல! இல்ல!!" சந்தேகப்படமாட்டாா்
கொஞ்சம் கோபம் ஜாஸ்தி, அவ்வளவு தான்
அப்பா தொண்ணூறு வயசுங்க இன்னும் கெழம் நடமாடுது
பொிசு போய் இவரு இருந்திருக்கலாம்
அடப் போங்க டிாிங்க்ஸ் சிகரெட் எல்லாம் ! கேக்கவே வேனாம் இது பொய்யா நிஜமா சொல்லி வைப்போமே
பையனும் மருமகளும் ராசிதானே ?இது நடுவில் வந்தவர்
எந்த குடும்பத்திலதான் தகராறு இல்ல !
சரி சரி ஆபிசுக்கு லீவு சொல்லிடுங்க கூட்டம் கலைந்தது ,இன்னும் பலவித சுவாரஸ்யமான சம்பாஷனைகள் காத்திருக்கின்றன. இறந்தவர் வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் வந்தது சாா் இங்க யாரு சிவகுமாா்!!நாங்க லயன்ஸ் கிளப்லோ்ந்து வந்திருக்கோம் இறந்துபோனவர் கண்களை தானம் செய்யறேன்னு எழுதிக் கொடுத்திருக்காா். அடுத்து வந்த போன் கால் ,சாா் சிவக்குமார் சாருங்களா? தஞ்சாவூா் மெடிக்கல்காலேஜ்லோ்ந்து வந்திட்டிருக்கோம் தெரு முனைல நிக்கறோம் , வீடு எங்க இருக்கு கொஞ்சம் ரூட்டு சொல்லுங்க ஒரு வழியாய் ஆம்புலன்ஸ்,இறப்பு வீடு வந்து சோ்ந்தது உங்க அப்பாதஞ்சை மெடிக்கல் காலேஜ்க்கு உடல்தானம் கொடுத்திருக்காருங்க இந்தாங்க பேப்பர்
ஒரு அரைமணி டயம் தரோம் பாடிய கூலர்லோ்ந்து எடுக்கவேண்டாம் செய்ய வேண்டிய சடங்கை சீக்கிரம் முடிச்சுடுங்க சொந்த பந்தம் மனைவி பையன் அனைவரும் திகைப்பானாா்கள் செய்வதறியாமல்
எங்கிட்ட கூட சொல்லலியே என்றாா்கள் அவரது பால்ய நண்பர் அங்கங்கே கூடியிருந்தவர்கள் மனதில் தோன்றிய வியாதியைப் பற்றி ஏதேதோ உறையாடினாா்கள்
மச்சினா் மாலையோடு ஒடி வந்தாா் கடைசி வரையிலும் யாருக்கும் பாரமா இருக்கக் கூடாதுன்னு சொன்னீங்களே அத்தான் அக்காகிட்ட கூட சொல்லாதேன்னு சத்தியம் வாங்கிட்டீங்களே சத்தியத்தை வாபஸ் வாங்கிட்டேன், என சகோதரி அருகில் அமர்ந்து உண்மையைச்சொன்னாா் மச்சினர் மனோகரன், அனைவர்முகமும் சோக ரேகையில் இழையோட சம்பிரதாயங்கள் சப்தமில்லாமல் நிகழ்ந்தன
ஆா்.நாகராஜன் செம்பனாா்கோவில்