tamilnadu epaper

செல்லப்பதி அய்யா வைகுண்டர் திருத்தாங்கலில் திருவிளக்கு பூஜை

செல்லப்பதி அய்யா வைகுண்டர் திருத்தாங்கலில் திருவிளக்கு பூஜை

பெளர்ணமி நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் கடையம்-செல்லப்பிள்ளையார்குளம் செல்லப்பதி அய்யா வைகுண்டர் திருத்தாங்கலில் திருவிளக்கு பூஜை விழா.* தென்காசி,ஏப்ரல்.13: கடையம் அருகே பாப்பான்குளம்-செல்லப்பிள்ளையார்குளம் பிரசித்தி பெற்ற செல்லப்பதி அய்யா வைகுண்டர் திருத்தாங்கலில் பங்குனி மாத பெளர்ணமி நாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை விழா மற்றும் அன்னதர்மம் நடைபெற்றது.தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த பாப்பான்குளம் அருகே உள்ள செல்லப்பிள்ளையார்குளம் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்டர் திருத்தாங்கலில் வைத்து நேற்றைய முன்தினம் பெளர்ணமி நாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வழிபாட்டுடன் இந்த மாத பெளர்ணமி பூஜை இனிதே நிறைவு பெற்றது.இதில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர் இதனையடுத்து செல்லப்பதி அய்யா வைகுண்டர் திருத்தாங்கலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதர்மம் வழங்கப்பட்டது.இத்திருத்தாங்கலில் செவ்வாய்,வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும் அய்யா வைகுண்டர் அருள்வாக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.