tamilnadu epaper

ஜனநாயகனின் சகாப்தம்

ஜனநாயகனின் சகாப்தம்


முடிவில்லா ஒரு தொடக்கத்தை எழுத நினைக்கின்றேன்....


வெறும் நடிகர்தானே என்ற வெற்று வார்த்தைகளை மறந்து அவர் கடந்து வந்த பாதைகளை பெருமையாய் பார்க்கிறேன்


"மாண்புமிகு மாணவன் "ஆகி "வசந்தவாசல் "வழியாக "நாளைய 

தீர்ப்பு "என வந்தவனும் இனி தீர்ப்பு தருபவனும் ஜன நாயகன் நீ தான்...


அன்று காதலுக்கு மரியாதை இன்று பிறந்த குழந்தைக்கும் மரியாதை வளர்ப்பு அதில் தெரிகிறது....


" நண்பன்"எல்லாம் என் நண்பர்கள்

 ஆல் இஸ் வெல் என்று நீ சொன்ன ஒரு வார்த்தை எங்களை எப்போதும் all is well ஆகவே வைக்கப் போகிறது இனி

நம் தமிழகத்தை


அன்றும் நீ " யூத் " தான் இன்றும் நீ தான் "யூத்" தான் என்றும் நீ யூத் தான் 


ஓய்வெடுக்கும் வயதை தாண்டியும் வருகிறேன் வருகிறேன் என விளையாட்டு காட்டாமல் ஓய்வுக்குப் பின் அரசியல் வர நினைக்காமல் .. திரை உலகின் சூப்பர் ஸ்டாருக்கு மத்தியில் உச்சத்திலேயே அதை விட்டு என் மக்களே மிச்சம் என வந்த நீ தானையா என்றும். நீ "யூத்" தான்....


உங்கள் " மின்சார பார்வை" கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை உங்கள் பின்னால் வர வைப்பதில்....

உண்மை தான் நீ மின்சாரக் கண்ணா தான்...

உனது," ரசிகனாய் " நான் மட்டுமல்ல இந்த மக்களின் நெஞ்சில் என்றும் இருக்கிறாய் 


என்றும் உன் " பிரியமுடன் "....

" வெற்றியின் " பின் வசந்த ராகம் பாடும் வானம்பாடி நீ


ஒரு நல்ல குடும்பத்தில்" வாரிசு" நீ பெற்றோரை அரசியல் பிரச்சனைகளில் இருந்து ஒதுக்கி வைத்து உன்னை பெருமையாய் பார்க்க வைத்திருக்கிறாய், அரசியல் மேடையில் நீதானே உண்மையில் நல்ல ஒரு வாரிசு...


மொத்தத்தில்" பூவே உனக்காக "தான் மேடையில் " கோயமுத்தூர் மாப்பிள்ளை ஆக மாண்புமிகு மாணவனாக" நீ என்றென்றும் காதலுக்கு உரியவன்.


எங்கள் மனமெல்லாம் உன்னை வெற்றி மேடையில் காண்பதற்கு... எங்கள் துள்ளாத மனமும் துள்ளுகிறது 


நாங்கள் நினைத்தோம் இப்படி 

ஒரு ஒரு தலைவன் இல்லையே என நினைத்தேன் வந்தாய் என்பது போல வந்து விட்டாய்.. நீ வராவிட்டாலும் பிரியமுடன் உன்னை அழைத்து இருப்போம்...


மொத்தத்தில் நாங்கள் எல்லோரும் அந்த வெற்றி நாளுக்காக குதூகலத்திற்காக குஷி "யாக காத்துக் கொண்டிருக்கின்றோம்.... பிரியமானவனே


" புதிய கீதை "யாய் உன் படைப்புகளை எங்களுக்கு படைத்திட்ட பகவதியும் திருமலையும் பத்ரி-யிம் நீதானே 

..


" அழகிய தமிழ்மகன்"னாய் எங்கள் அனைவரதும் இதயத்திலும் நீ...


உன் " உதயத்திற்காக "இந்த தமிழ்நாடு முழுவதும் ஏங்குதடா...


"ஆதி "யும் நீதான் அந்தமும் நீதான்...


நீ கத்தி எடுத்தாலும் சரி துப்பாக்கி எடுத்தாலும் சரி உன் குறி தப்பியதே இல்லை


என் இதயத்துடிப்பு ஒவ்வொன்றும் " பந்தயம் " போட்டுக்கொண்டு அந்நாளுக்காக ஏங்குகிறது...


குற்றங்களை தட்டிக் கேட்கும் வேட்டைக்காரன்"னாய் நீ 

விரைந்து வா எங்கள் காவலனாய்" 


எங்கள் " ஜில்லா "வை ஆளப்போகும் " தலைவா " " தெறி " க்க விடப் போகிறாய் தமிழகத்தை. 


உன் வருகையில் மெர்சலாகி கிடக்கும் பலருக்கு உன் வெற்றியில் பிகில் அடித்து வரவேற்க காத்திருக்கிறோம்.

 நாங்கள்

உழைப்பதில் நீ மாஸ்டர்

 கற்றுத் தருவதில் நீதான் லியோ..


நீ வெட்டிப்புலி அல்ல வெற்றி புலி வருக வெல்க

ஐ அம் வெயிட்டிங்



-ஜானகி

துறையூர்