ஜார்க்கண்டில் ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளார். இந்நிலையில், ஜார்க்கண்டில் அடுத்த நிதியாண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் தீபக் பிருவா தெரிவித்துள் ளார். அம்மாநில சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரதீப் யாதவ் சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் தீபக் பிருவா, “ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்துவதில் அரசு தீவிரமாக உள்ளது. அடுத்த நிதியாண்டில் சாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்துவதற்கு அனை த்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இதற்காக பணியாளர் துறை ஏற்கனவே இந்தப் பணியை மேற்கொள்ள ஒரு நோடல் நிறுவனத்தை (ஒருங்கிணைப் புப் பணியை மேற்கொள்வதற்கு நிய மிக்கப்பட்ட நிறுவனம்) நியமித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தேவைப் படும் மொத்த ஆட்களின் எண்ணிக்கை, பணியின் அளவுகள் மற்றும் நிதி அம் சத்தை உறுதி செய்வதற்காக அறிவிப்பு கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன” என அவர் கூறினார்.