அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகிய இருவரும் இரண்டு மணி நேரம் நடத்திய தொலைபேசி உரையாடலில் புடின் விதித்த நிபந்தனைகளுடன் ஒரு போர் நிறுத்த உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தத்தை மேற் கொள்வதற்கான நடவடிக்கையை தீவிரப் படுத்தி வருகிறார். அதே போல ரஷ்யாவு டனான பொருளாதார உறவுகளை மீண்டும் மேற்கொள்ளும் முயற்சிகளையும் முன்னெ டுத்து வருகிறார். சவூதி அரேபியாவில் ஜெட்டா நகரில் உக்ரைன் அதிகாரிகளுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் நடைபெற்ற ஒரு பேச்சுவார்த்தையில் 30 நாட்க ளுக்கு போரை இடைநிறுத்துவது என அமெரிக்கா முன்மொழிந்த திட்டத்தை உக்ரைன் ஏற்றுக் கொண்டது.
இந்த முன்மொழிவு ரஷ்யாவின் ஒப்புத லுக்காக அனுப்பப்பட்டதுடன் அமெரிக்க தூதரும் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா சென்றார். எனினும் அந்த முன்மொழிவை ரஷ்யா ஏற்க வில்லை. இரு நாட்டுத் தலைவர்களும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் போது ஒரு உடன்பாடு எட்டப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் மார்ச் 18 அன்று டிரம்ப்-புடின் ஆகிய இருவரும் 2 மணி நேரம் உரையாடினர். இந்த உரையாடலில் 30 நாட்களுக்கு இரு நாடுகளும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவது என முடிவு செய்யப் பட்டுள்ளது.
மேலும் உக்ரைனும் ரஷ்யாவும் தங்கள் வசம் உள்ள போர்க் கைதிகளில் 175 நபர்களை மார்ச் 19 அன்று பரிமாற்றம் செய்து கொள்வது, நல்லெண்ணத்தின் அடிப்படையில் ரஷ்ய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற உக்ரைன் ராணுவ வீரர்களில் 23 நபர்களை ரஷ்யா விடுவிக்கும் என்று கூறப் பட்டுள்ளது. இதே நேரத்தில் உக்ரைனுக்கு இந்த 30 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து ராணுவ உதவிகள் செய்யக்கூடாது, அமெரிக்கா ராணுவம் மற்றும் உளவு உதவியை நிறுத்த வேண் டும் எனவும் ரஷ்யா நிபந்தனை வித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா-ரஷ்யா பொருளாதார உறவுகளை துவங்குவது குறித்தும் பேசப்பட்டுள்ளது. இருநாட்டு உறவுக ளை மறுகட்டமைப்பு செய்வதன் ஒரு பகுதியாக ஹாக்கி போட்டி நடத்தலாம் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.