சென்னை, ஏப். 17-
டெல்லிக்கு மோடி....தமிழகத்துக்குநான் என்று தான் அமித்ஷா கூறினார்.தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக பொதுச் செயலா ளர் பழனிசாமி திட்டவட்டமாக கூறினார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நேற்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். இவர்கள் ஏன் எரிச்சல் அடைகிறார்கள்? தி.மு.க.,வுக்கு பயம் வந்துவிட்டது. எங்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டணி வைத்துள்ளோம். யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் அது எங்கள் விருப்பம்.
திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் சிதறக்கூடாது என்பதற்காகவும், வெற்றியை நோக்கமாக கொண்டும் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளோம், இதில் மேலும் பல கட்சிகள் விரைவில் சேரும். எந்தெந்தகட்சிகள் என்பதை இப்போது சொல்ல முடியாது.
கூட்டணி ஆட்சியா?
* அமித்ஷா கூட்டணி அரசு அமைக்கப்படும் என கூறியிருக்கிறாரே?
கூட்டணி அரசு அமைப்பதாக அமித் ஷா கூறவில்லை. நீங்கள் ஏதோ தப்பாக புரிந்து கொண்டு ஏதோ வித்தை காட்டுகிறீர்கள். இந்த வித்தையை எல்லாம் விட்டுருங்க. டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழகத்துக்கு நான் என்று அமித்ஷா தெளிவாக கூறிவிட்டார். இதில் ஏதே விஞ்ஞான மூளையை எல்லாம் பயன்படுத்தி கண்டுபிடிப்பதை விட்டுருங்க, நாங்கள் பார்த்து கொள்கிறோம். இவ்வாறு பழனிசாமி கூறினார்.