tamilnadu epaper

தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசித்தல்

தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசித்தல்

 

தமிழ் வருட பிறப்பு அன்று காலையில் எழுந்ததும் காலை கடன்களை முடித்து விட்டு, வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து மாவிலை தோரணம் கட்டவும். புதிய பஞ்சாங்கத்திற்கு மஞ்சள் குங்குமம் இட்டு பூ வைக்கவும்.

தீபம் ஏற்றி வணங்கிய பிறகு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கேட்கும்படி பஞ்சாங்கம் படிக்கவும். 


வீட்டில் உள்ள மூத்தவர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி மரப்பலகையின் மீது அமர்ந்து கொண்டு குடும்ப உறுப்பினர் அனைவரின் முன்னிலையில் விசுவாவசு வருடத்தின் *தமிழ் வருட பிறப்பு பிறக்கும் நேரத்தையும் பஞ்சாங்கத்தில் கீழ்கண்டவற்றின் விவரங்களையும் படிக்கவும்.* 


01. வெண்பா


02. மகரசங்கராந்தி 


03. கந்தாயபலன்


04. நவ நாயகர்களின் பாதசாரங்கள்


05. ஆதாய விரய விவரங்கள்.


(அதன் பிறகு வழக்கமாக படிக்கும் இன்றைய பஞ்சாங்கமும் படிக்கவும்) 


காலையில் பஞ்சாங்கம் படிக்க சந்தர்ப்பம் இல்லை எனில் மாலை சூர்ய அஸ்தமனத்திற்கு பிறகு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒருவர் படிக்க அனைவரும் கேட்கவும்.


-தகவல்கள்:

கஞ்சர்ல 

 கோ.பிரபாசங்கர், கீழ்பாலூர்