ஆராரோ ஆராரோ
அம்புலியே ஆராரோ/
செக்கச் சிவந்தமகள்
செம்பருத்தித் தாலேலோ/
தமக்கைநான் தாலாட்டக்
கண்ணுறங்குத் தாலேலோ/
செந்நெல் விளைஞ்சிச்
செழித்திடத் தாயாரும்/
மெல்ல அசைந்திட
அன்புகொண்டு ஆட்டிட/
அக்காப் பாட்டெடுத்து
மெல்லிசையில் பாடிட/
ஆலமர நிழல்தன்னில்
தொட்டிலுக்குள் நீதுயில/
ஆதரவாய் நானிருக்க
அம்மாவும் வேலைசெய்ய/
கைநிறைய செல்வம்கொண்டுக்
காலமெல்லாம் சிறந்திட/
அழவேண்டாம் ஆராரோ
பயம்வேண்டாம் தாலேலோ/
வெட்டவெளி தொட்டிலிலே
வீசுமின்பக் காற்றினிலே/
பாசமிகுத் தமக்கையுமே
பாடிடுவேன் தாலாட்டே.../
-பானுமதி நாச்சியார்