திருநெல்வேலி


திருநெல்வேலி" />

tamilnadu epaper

திருநெல்வேலி: எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் "சமத்துவ நாள்" உறுதி மொழி

திருநெல்வேலி: எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் "சமத்துவ நாள்" உறுதி மொழி

ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் உள்ள போலீசார் "சமத்துவ நாள்" உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

திருநெல்வேலி


திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் காவல் துறையினர் "சமத்துவ நாள்" உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதேபோல் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் வினோத் சாந்தாராம் (கிழக்கு), விஜயகுமார் (தலைமையிடம்) மற்றும் காவல் துறையினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


மேற்சொன்ன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட காவல் துறையினர் அனைவரும், "சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்" என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.