திருப்பதி, மே 21–
திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறையில் 4 அகண்ட விளக்குகள் கொண்டு, பாரம்பரியமாக அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இந்த விளக்குகளை
300 ஆண்டுகளுக்கு முன்னர், மைசூர் மகாராஜா கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையானுக்கு 2 பெரிய வெள்ளி அகண்ட விளக்குகளை மைசூர் ராஜ குடும்பத்தினர் நன்கொடையாக கொடுத்துள்ளனர். தலா 50
கிலோ எடை கொண்ட இந்த அகண்ட விளக்குகளை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய சவுத்ரியிடம் மைசூர் ராஜமாதா பிரமோதா தேவி வழங்கினார்.