திருப்பாவையின் விளக்கம் கேட்டு ரசித்த உள்ளங்கள் அப்பாசுரங்களை எழுதும் விதத்தைக் கற்பனை செய்து இருக்காது.
அந்தக் கற்பனையில் ஆண்டாளும் கண்ணனுடன் பகிர்ந்து வார்த்தைகளை வரிசை கட்டும் விதமாக 30 பாசுரங்களும் எழுதப்பட்டிருப்பதாகக் கற்பனை செய்து இருக்கிறார் பானுமதி நாச்சியார்.
ஆண்டாளைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் ஆயர்பாடியில் நடப்பதாகக் கற்பனை ஆண்டாளுக்கு. ஆம். இவரும் அவரை அங்கே கொண்டு போய் ஆனால் கண்ணனும் அங்கிருப்பதாய்க் கற்பனை செய்து கொண்டு, அவன் ஆண்டாளை வரவேற்று ஆயர்பாடியின் இயற்கை எழிலை, தன்அரண்மனை, மாடுகளின் செழிப்பை ஆயர் மகன் மகளிர் தோற்றங்களை என ஒவ்வொன்றாக விளக்கிப் பின் தன் தாயையும் அவளுடன் ஆன சில அந்தரங்க நிகழ்வுகளையும் சொல்லி சொல்லி அவளைப் பாசுரம் எழுத வைப்பதில் மகிழ்கிறான் கண்ணன்.
கடைசியாகத் தன் கோகுலப் பசுக்களைக் கூட்டிக் கொண்டு கானம் சேர்ந்து உண்போம் என்று விருந்து வைத்து அவளுக்கு ஒரு வரத்தையும் தருகிறான். அது என்ன வரம் என்பதைப் பெரியாழ்வாரே மகிழ்ந்து அவளின் ஒவ்வொரு பாசுரத்தையும் அவளைக் கொண்டே வாசித்துக் காட்டச் சொல்லி மகிழ்கிறார். இவ்வாறு வடித்த பானுமதி நாச்சியாருக்கும் இதனை வெளியிட்ட பேக்கி டெர்ம் டேல்ஸ் நிறுவனத்திற்கும் இதனை அச்சிட்டு வெளியிட்ட புத்தகா பதிப்பகத்திற்கும் எனது வாழ்த்துக்கள்.
இந் நூலைப் பெற விரும்புவோர் திருமாலும் திருப்பாவையும் பேக்கி டெர்ம் டேல்ஸ் புத்தகா வெளியீடு
விலை ரூபாய் 260
தேவைக்கு 9442531504