என்று கணவனிடம் சொல்லிக் கொண்டே சீக்கிரம் ரெடி யானாள் மணிமேகலை. 

 

     ஒரு வயதான" />

tamilnadu epaper

திருஷ்டி

திருஷ்டி

சுதாகரும் மனைவி மணிமேகலையும் அலுவலகத்துக்குப் புறப்பட்டனர். 

 

  " நேரமாச்சு சீக்கிரம் வாங்க "

என்று கணவனிடம் சொல்லிக் கொண்டே சீக்கிரம் ரெடி யானாள் மணிமேகலை. 

 

     ஒரு வயதான பெண் குழந்தை

அக்ஷயாவை குளிக்க வைத்து

பவுடரைப் பூசி அவள்

மாமியாரிடம் விட்டு விட்டு கிளம்பத் தயாரானார்கள். வண்டியைக் கிளப்பும் சமயம் "கொஞ்சம் இருங்க சுதா!" என்றவள் அவசரம் அவசரமாக வீட்டுக்குள் சென்றாள்.

 

    திரும்பி வந்தவள் "அக்ஷயாவுக்கு திருஷ்டிப் பொட்டு வைக்க மறந்துட்டேன்" என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டியில் ஏறி உட்கார்ந்தாள்.

 

    மணிமேகலைக்கு இதில் எல்லாம் நம்பிக்கை அதிகம்.

குழந்தை பிறந்ததிலிருந்து வெளி ஆட்கள் யாரையும் வீட்டிற்குள் அவ்வளவு சீக்கிரம் அனுமதிக்க மாட்டாள்.குழந்தைக்கு திருஷ்டிப்பட்டுவிடும் என்பாள்.

 

   ஒருமுறை பக்கத்து வீட்டு பரிமளம் அக்கா குழந்தையைத் தூக்கி கொஞ்சி விட்டுப் போன பிறகு அக்ஷயாவுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

உடனே மணிமேகலை பரிமளத்தின் கண் பட்டதால் தான்

இப்படியானது என்று பொருமித் தள்ளி விட்டாள் .

 

  அன்று ஞாயிற்றுக்கிழமை.

இருவரும் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தார்கள். மாடியில்

குழந்தையைத் தூளியில் ஆட்டிக்கொண்டிருந்தாள் மணிமேகலை.

 

 

 

 

    கதவு திறந்து இருந்ததால் எதேச்சையாக வீட்டுக்குள் வந்த

எதிர்வீட்டுப் பெண் சுபா பதற்றமான குரலில் " அக்கா!

தூளியை ஆட்டாதீங்க..கயிறு அறுந்திருக்கு" என்று ஓடிவந்து

குழந்தையை அள்ளிக் கொண்டாள்.

 

   

 

  பயந்து போன மணிமேகலை

அவள் போன பின்பு சுதாகரிடம்

"இதற்குத்தான் நான் யாரையும் உள்ளே விடறது இல்ல. அவ கண்ணு பட்டு தான் இப்படி ஆச்சு" என்றாள் பதட்டமாக.

 

   தலையில் அடித்துக் கொண்ட சுதாகர் " மணி! நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா?

அன்னைக்கு ஃபீடிங் பாட்டில் சரியா கழுவாததால்தான் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு வந்துச்சுன்னு டாக்டர் சொன்னாரா இல்லையா ..

இன்னைக்கு கயிறு அறுந்ததுக்கு சுபா தான் காரணம்னு சொல்றே..ஆனா அந்த நேரத்துக்கு அவ வரலைன்னா

குழந்தையோட கதி என்னவாகி இருக்கும் ?

எல்லா விஷயத்திலும் உன் மூடநம்பிக்கையைப் புகுத்தாதே.

எதையும் பாசிட்டிவா பாக்கக் கத்துக்கோ " என்று சொல்லியவுடன் தலை குனிந்தாள் மணிமேகலை. 

 

மு.மதிவாணன்

குபேந்திரன் நகர்

அரூர் 636903