tamilnadu epaper

திறமை

திறமை

        ”எங்கேடி அது?” காலையிலேயே கத்தினார் ராஜவர்மன்.

 

              ”எதுன்னு சொல்லி தொலையுங்களேன்” குரலுக்கு முன்னால் கரண்டி வந்ததில் மிரண்டார்.

 

              ”அதுதான் என் பேனா!” இழுத்தார்.

 

              ”ஒங்களுக்கு டிபன் வேணாமா?” கேள்வியில் ரவா தேசையின் நெய் மணம் மூக்கைத் துளைத்ததால், நடையை எட்டிப் போட்டு ரூமுக்குள் பாய்ந்து பேனாவை தேடலானார்.

 

              ”கிடைக்கலையே! பத்திரிகை ஆபிஸ்ல இருந்து போன்… எடிட்டர் வழக்கமா ”சாரோட கதை வந்திருக்கா?” கேட்பாராம்… ஆனா இப்போ..”என்னய்யா ஆச்சு இந்தாளுக்கு?ன்னு கத்தறாராம்.

 

              ”ஏதாவது ஒரு பேனாவில எழுதி தொலைக்க வேண்டியதுதானே ”அந்த பேனாவில் எழுதினாத்தான் கதை நல்லா வரும்ன்னு செண்டிமெண்ட் பீலிங்” என்றார் ராஜவர்மன்.

 

              ”இந்த பேனாவில எழுதுங்க.. கதை நல்லா விடறீங்களான்னுதான் பார்ப்போமே! ஹிக்கும்-வில் பலப்பல அர்த்தங்கள்

 

              பேனாவோடு அறைக்குள் நுழைந்தவர் பத்தே நிமிடத்தில் கதையோடு வெளியே வந்தவார். முகம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் முகமாய் ஜொலித்த து.

 

              ”இதோ கதை! நீயே படிச்சு பாரேன்!”

 

              ”பேஷ் ! பேஷ் சூப்பர்ப்…. பாலகுமாரன் ரேஞ்சுக்கு போயிட்டீங்களே! ஆச்சர்யத்தோடு பார்த்தாள் சுபாஷிணி

 

              ”அது சரி… அந்த பேனா யாரோடது?”

 

              ”என்னோட தாத்தா யூஸ் பண்ண பேனா… ஆனா அவருக்கு எழுத படிக்க தெரியாது… கையெழுத்து மட்டும் அதுலதான் போட கத்துகிட்டாராம்” என்றாள்.

 

              தன் திறமையை அந்த நேரத்தில்தான் ராஜவர்மன் உணர்ந்தார்.

 

                      --கே. அசோகன் சென்னை