“நாகமணிக்கு கல்யாணம் நிச்சயமாயிட்டாமே…?” என்றார் பண்ணையார் பரமசிவம் கூலியாள் வெள்ளச்சாமியிடம்.
“ஆமாங்கய்யா கருப்பசாமி மகனுக்குத்தான் கொடுக்கிறதா ஏற்பாடு…!”
“அவ யோக்கிதை தான் ஊருக்கே தெரியுமே எந்த மூஞ்சிய வச்சிகிட்டு அந்த செல்வம் எம் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன் வாங்கன்னு பத்திரிகை வைப்பான்.”
“அவ ஆத்தாவே சரியில்லாத போது மவ எப்படி இருப்பா…? இப்ப மானம் மரியாதையையா பெருசா நினைக்கிறாங்க காசு பணம் வந்தா போதும் என்ன நான் சொல்றது…!”
“வந்த வேலையை விட்டுட்டு ஏதேதோ பேசிகிட்டு இருக்கேன் பாரு, கிணத்தை தூர் வாரணும் கஜா புயல் அடிச்ச மறுவாரமே தூர் வாரியிருக்கணும் விட்டுட்டேன் கூட ஒரு ஆள வேணா சேத்துக்க” என்றார் பண்ணையார் பரமசிவம்.
‘கிணத்தை தூர்வாரலாம் மனத்தை’ என்று எண்ணியபடி வெள்ளச்சாமி மம்பட்டியை எடுக்க சென்றார்.