tamilnadu epaper

நகங்களை பராமரிப்பதற்கான எளிய வழிமுறைகள் !!

நகங்களை பராமரிப்பதற்கான எளிய வழிமுறைகள் !!


தரமான நகப்பூச்சுக்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு எந்தவித பாதிப்பும் வராது. சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு சிரமமாக இருக்கும். எனவே விரல்களை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் வெட்டலாம்.


 நகங்கள் அடிக்கடி உடைந்து போனால், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை ஊறவைத்து பின்னர் கழுவினால் நகங்கள் உறுதியாகும். நகப்பூச்சுயுடன் சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்தி வந்தால் மிகவும் நல்லது.


தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.


 தினமும் நகப்பூச்சு உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்பட்டால் நகப்பூச்சுக்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


 ஈரமாக இருக்கும் போது நகங்களை ஷேப் செய்தால் நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரத்தன்மையின்றி இருக்கும்போது ஷேப் செய்ய வேண்டும். அப்போது தான் நகங்கள் வலுப்பெறும்.


 கிளிசரின் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும்.


 அதேபோல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாததிற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.


ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.


 மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால் நகங்களில் காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.


 

இதனால கூட முதுகுவலி வருமா ?


நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை முதுகுவலி. அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள், மார்க்கெட்டிங் வேலையில் இருப்பவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் பருமனானவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் தாக்குகிறது இந்தப் பிரச்சனை. முதுகுவலி ஏற்பட காரணம் என்ன? 


முதுகுவலி ஏற்படக் காரணங்கள் :


 அதிக அளவு எடையுள்ள பொருள்களை தூக்கும் போது முதுகுத் தண்டு மற்றும் தசைகளில் அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலர் வேலைசெய்யும் பொழுது தவறான முறையில், ஒரே கைகளில் எடையைத் தூக்கி கொண்டு செல்வார்கள். இதனால் முதுகு வலி ஏற்படலாம். 


 பெண்கள் ஹீல்ஸ் கொண்ட காலணிகள் அணிவதால், இடுப்புத் தசை அழுத்தப்பட்டு அடிமுதுகில் வலி ஏற்படுகிறது. 


 செரிமானக் கோளாறு, குடல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்த்தால் முதுகுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.


 பல மணி நேரம் தொடர்ந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதால், முதுகுத் தண்டுவடத்தின் நெகிழ்வுத்தன்மை குறைந்து இறுக்கமாகிறது. இதனாலும் முதுகுவலி ஏற்படலாம். 


 புகைபிடிப்பதால், முதுகுத்தசை உறுதிக்கு உதவும் ஊட்டச்சத்துகள் அங்கு சென்று சேராமல், முதுகுத்தசை வலுவிழந்துவிடுகிறது.


 எந்தவித சத்துக்களும் இல்லாத நொறுக்குத் தீனிகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் விளைவாக அடிமுதுகு உட்பட உடலில் பல பாகங்களில் வீக்கம், வலி ஏற்படுகிறது.


 அலுவலக வேலைச்சுமை, வீட்டுப் பிரச்சனைகளால் ஏற்படும் மனஅழுத்தத்தின் விளைவாகவும் முதுகுவலி ஏற்படலாம்.


முதுகுவலியை விரட்டும் வழிகள்:


 பெரும்பாலும் அலுவலகங்களில் அமர்ந்து கொண்டே தான் வேலை செய்ய வேண்டிய நிலை இருக்கும். எனவே அவர்கள் வேலை செய்யும் போது ஒழுங்காக, நேரான முறையில் வசதியாக அமர்தல் அவசியம். அதுமட்டுமின்றி நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே இருக்காமல், கொஞ்சம் எழுந்து நிற்பது, நடந்து செல்வது என உடலுக்கு அவ்வப்போது வேலை கொடுப்பது நல்லது.


வாரத்தில் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கமாக கொள்ளுங்கள். வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைகளை உற்சாகப்படுத்த இது உதவும். 


 ஆண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி மற்றும் முதுகு வலிக்கு நீச்சல் உடற்பயிற்சி செய்தால் எந்த தைலம், மருந்தும் தேவையில்லை.


 பெண்கள் அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.


 முதுகு வலி அதிகமாக இருப்பவர்கள் 5 மிளகு, 5 கிராம்பு, 1 கிராம் சுக்கு சேர்த்து நீர் விட்டுத் தேநீர் செய்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.


 


பற்களையும், எலும்பையும் வலுப்படுத்த எளிமையான வழி 


சேப்பங்கிழங்கு செடியினத்தைச் சேர்ந்தது. இது வழவழப்பான தன்மையுடையதாக இருக்கும். சேப்பங்கிழங்கில் பற்களையும், எலும்பையும் வலுப்படுத்தக்கூடிய பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துகள் அதிகம் உள்ளது.


100 கிராம் சேப்பங்கிழங்கில் 97 கலோரி உள்ளது. அதுமட்டுமின்றி இதில் இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி போன்ற சத்துகள் உள்ளன.


 சேப்பங்கிழங்கு வெட்டை நோயைக் குணமாக்கவும், கண்பார்வைத் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.


 இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் கழிவு மண்டலத்தில் அழுக்குகள் தேங்குவதைத் தடுப்பதுடன் மலச்சிக்கலையும் தடுக்கிறது.


மேலும் இது நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் குணமுடையது. இக்கிழங்கை ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனையை போக்கலாம்.


 கட்டிகளுக்கும், புண்களுக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது. சேப்பங்கிழங்கை அரைத்து கட்டிகள் மற்றும் புண்களின் மேல் பற்றாகப் போட்டால் விரைவில் குணமடையும். குடல் புண்களை விரைவில் குணப்படுத்தும் தன்மை உடையது. மேலும் தோல் சம்பந்தமான நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.


 இதிலுள்ள பொட்டாசியம் சத்து இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.


 இக்கிழங்கிலிருந்து குழந்தைகளுக்கான சத்துணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இக்கிழங்கின் மாவு குழந்தைகளுக்கான மற்ற சத்துணவுப் பொருள்களில் முக்கிய மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. 


குறிப்பு :


சேப்பங்கிழங்கு வாதத் தன்மையை அதிகரிக்கும் குணமுடையது. எனவே வாத நோயால் அவதிப்படுபவர்கள் இக்கிழங்கை உணவாக எடுத்துக் கொள்ளக்கூடாது.


இக்கிழங்கு மருந்துகளின் வீரியத்தை மட்டுப்படுத்தும் தன்மை உடையதால், நோய்க்குச் சிகிச்சைப் பெற்று வருபவர்களும் இதைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.


இதையெல்லாம் இன்னும் அருந்தறீங்களா ?

குளிர்பானங்களில் இனிப்பும், கலோரியும் அதிகமாக உள்ளது. ஆனால், மக்கள் அனைவரும் குளிர்பானங்களைத் தான் விரும்பி அருந்துகிறார்கள். இதனை அருந்துவதால் உடலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.


 ஒரு டின் குளிர்பானத்தில் கிட்டத்தட்ட 150 கலோரி சக்தி இருக்கிறது. இதை அருந்தும் போது உடலில் தேவைக்கு அதிகமான கலோரிகள் சேர்ந்து கொழுப்பாக மாறி உடலிலேயே தங்கிவிடும். இதனால் ஈரலில் பாதிப்பு ஏற்படும். இதன் சுவையினால் பலரும் இதனை விடமுடியாமல் குளிர்பானங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். 


 குளிர்பானங்களில் காபின் என்ற பொருள் உள்ளது. காபின் அதிகமாக சிறுநீரை உருவாக்கும் சக்தி கொண்டது. இதை குடித்தவுடன் உடலுக்கு சக்தி தருவது போன்று தோன்றினாலும், அதில் இருக்கும் தண்ணீர், சோடியம் போன்ற தாதுக்கள் சிறுநீர் வழியாக சிறிது நேரத்திலே வெளியேறிவிடும். சிறுநீர் கழித்ததும் அதிக தாகமும், சோர்வும் தோன்றும்.


 குளிர்பானங்களில் இருக்கும் ஹை பிரக்டோஸ்கார்ன் என்ற சிரப் பொருள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனே உயர்த்திவிடும். ஒரு டின் குளிர்பானம் உடலுக்குள் செல்லும்போது இரத்தத்தில் உள்ள பிராக்டோசின் அளவு நான்கு மடங்கு அதிகரிக்கும். இதை சர்க்கரை நோய் இருப்பவர்கள் குடித்தால் உடலுக்கு மிகுந்த பாதிப்பை உருவாக்கும்.


 அவ்வப்போது குளிர்பானம் பருகுகிறவர்களுக்கு வயிற்று உப்புசம், வாயுத்தொந்தரவு, பசியின்மை, வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் உண்டாகும்.


 இதற்கு காரணம், நாம் அருந்தும் குளிர்பானம் இரைப்பையை அடையும்போது உருவாகும் கார்பன் டை ஆக்சைடுதான். மேலும் அசிடிட்டி, புளித்த ஏப்பம் போன்ற தொந்தரவு இருப்பவர்கள் குளிர்பானங்களை பருகாமலே இருப்பது உடலுக்கு நல்லது.


 குளிர்பானங்களில் உள்ள அதிக இனிப்பு தன்மை பற்களை சேதமாக்கும். மேலும் எலும்புகளில் இருக்கும் கால்சியத்தை பாதிக்கும் சக்தி இதற்கு இருப்பதால் எலும்பு அடர்த்திக்குறைவு போன்ற நோய்கள் தோன்றக்கூடும்.


 அடிக்கடி குளிர்பானங்களை குடிப்பவர்களுக்கு கிட்னியில் கல் ஏற்படும் பாதிப்பும் அதிகமாக உள்ளது.


 எனவே உடலுக்கு கேடு தரும் குளிர்பானங்களைக் குடிப்பதைத் தவிர்த்து, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் இளநீர், மோர், பழச்சாறு, எலுமிச்சைச் சாறு போன்றவற்றைப் பருகுங்கள். 


 வாழைப்பழத்தின் வகைகளும், அதன் பயன்களும்!!


உலகில் மொத்தம் 3000 வாழை வகைகள் இருக்கின்றன. அதில் உள்ள ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு விதமான நோய்களை குணமாக்க உதவுகிறது.

பூவன் பழம்


 பூவன் வாழைப்பழம் அளவில் சிறியதாக இருக்கும். ஆனால் ஒரு வாழைத்தாரில் 100 முதல் 150 பழங்கள் வரை இருக்கும். இப்பழம் மூலநோயை குணமாக்க பெரிதும் உதவுகிறது.


ரஸ்தாளி

 ரஸ்தாளி வாழைப்பழத்தில் மருத்துவக் குணங்கள் குறைவாக இருந்தாலும் ருசி அதிகமாக உள்ளது. இனிப்புகள், சாலட்களில் சேர்க்கப்படும் இந்த ரஸ்தாளி பழம் உடல் வறட்சியைப் போக்க மற்றும் மஞ்சள் காமாலையைத் தடுக்க உதவுகிறது.


பச்சை வாழைப்பழம்


 மலை வாழைப்பழம் எனப்படும் பச்சை வாழைப்பழம், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இது இரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.


நேந்திரம் பழம்


 நேந்திரம் பழத்தை பச்சையாகவோ, அவித்தோ அல்லது சிப்ஸ் வடிவிலோ சாப்பிடலாம். புரதம் அதிகம் கொண்ட இந்த பழம் குடற்புழுக்களை அகற்ற உதவுகிறது.


கற்பூரவள்ளி பழம்


 கற்பூரவள்ளி வாழைப்பழம் மிகவும் இனிப்பானது. ஆனால் இந்த பழத்தை நீண்ட நாட்களுக்கு வைத்து சாப்பிடுவது மிகவும் கஷ்டமாகும். இந்த பழமும் மலச்சிக்கல் பிரச்சனைப் போக்க உதவுகிறது.


செவ்வாழைப்பழம்


 செவ்வாழைப்பழம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் உடலில் பலத்தை அதிகரித்து, செல்களின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.


எலைச்சி


 எலைச்சி வகை வாழைப்பழமானது, சிறியதாக இருந்தாலும், அவை மிகச் சுவையானது. இப்பழம் மலச்சிக்கல் பிரச்சனையைக் குணமாக்க உதவுகிறது.


பேயன் பழம்


 பேயன் வாழைப்பழமானது வயிறு மற்றும் குடல் புண்கள் போன்ற பிர ச்சனைகளை குணமாக்குவதுடன், உடல்சூட்டை தணிக்கிறது.

கோவக்காயின் மருத்துவப் பயன்கள் !!!


நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை தந்த காய்கள், பழங்கள் மற்றும் செடிகளே சிறந்த மருந்தாகப் பயன்படுகின்றன. அந்த வகையில் இன்று எளிதில் கிடைக்கக்கூடிய கோவக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகள்


சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் :

 கோவக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுத்தாது. 


வாய்ப்புண் குணமாக :

 கோவக்காயில்; பச்சடி செய்து தொடர்ந்து இரண்டு நாட்கள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். 


 வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவக்காயை சேர்த்துக் கொள்ளலாம். ஒரே ஒரு கோவக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் வாய்ப்புண் குணமாகும். 


நுரையீரல் பிரச்சனைகளைப் போக்கும் கோவக்காயின் இலை மற்றும் தண்டு - கபத்தை வெளியேற்றும். வலியைக் குறைக்கும். இலை மற்றும் தண்டு - மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். 


வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் 


 கோவக்காய் பித்தம், இரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவக்காயின் இலைச் சாறு பித்தம், மூலநோய் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.


 கோவக்காயில் உள்ள மெட்டபாலிக் தன்மைகள் நமது இதயத்துக்கு மிகவும் நல்லது. இது கல்லீரலுக்கும் நன்மை தரக் கூடியது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற காய் ஆகும். மஞ்சள் காமாலை நோயாளிகள் இதை சாப்பிட்டால் விரைவில் குணம் அடையலாம்.


ஆஸ்துமா குணமாக :


 கோவக்காய் இலைச் சாற்றை, காலை, மாலை என 30 மில்லி அளவு நான்கு நாட்கள் குடித்து வர சீதபேதி குணமாகும். கோவக்காய் மற்றும் வேர்க்கிழங்கு சாறு 10 மில்லி எடுத்து காலையில் மட்டும் குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும்.


 கோவக்காய் உடல் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் உடையது. மேலும் கோவக்காய் உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கும் குணம் கொண்டது. தேவையற்ற உணவுப் பழக்கங்களால் வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தணிக்கும் மற்றும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் உடையது.


 கர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடலாமா ?

அனைவருக்கும் பிடித்த வேர்க்கடலை இதய நோயை தடுக்கவும், கர்ப்பிணிப் பெண்களின் உடல்நல ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவுகிறது. வேர்க்கடலையில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது 


வேர்க்கடலையில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு அதிகம் உள்ளது. வேர்க்கடலையில் உள்ள தாமிரச் சத்து நமது உடலில் எல்.டி.எல். () எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் எச்.டி.எல். () கொழுப்பை அதிகப்படுத்துகிறது.


வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவுகிறது.


உடல் பருமன் உள்ளவர்கள் உடலைக் குறைக்க விரும்பினால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சீனி சோ;க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறையும்.


வேர்க்கடலையை தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வருவதன் மூலம், இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனோஅன்சேச்சுரேட் ஒலீக் அமிலம் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது.


நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகின்றது.


இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு, வேர்க்கடலையில் மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக இரத்த கொதிப்பு குறையும்.


பற்கள் பலம் பெற வேர்க்கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது.


கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது. வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன.


தினந்தோறும் பெண்கள் 400 கிராம் என்ற அளவில் வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை வேர்க்கடலையில் அதிகம் உள்ளன.


பெண்களுக்கு ஏற்படும் மார்பகக்கட்டியை தடுப்பதில் வேர்க்கடலை முக்கியப் பங்கு வகிக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான சத்துகள் வேர்க்கடலையில் நிறைந்துள்ளது. இதனால் பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.


கர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடுவதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது. மேலும் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவாக உள்ளது.


பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க தினந்தோறும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) என்ற அளவில் சாப்பிட வேண்டும். 


 


உங்கள் குழந்தைக்களுக்கான தகவல் !!



 இரவு வேளையில் குழந்தைகளைச் சாப்பிட வைப்பதென்பது பெற்றோருக்கு மிகவும் சவாலான ஒரு வியமாகும். அதிலும் இரவு உணவை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிடும். எந்த உணவைக் கொடுத்தாலும் வேண்டாம் என்று குழந்தைகள் ஒதுக்கி விடுவார்கள், அவர்களுக்கு ஆரோக்கியமான இரவு உணவுகளை அவர்களுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


 மாலை நேரம் ஸ்நாக்ஸைத் தாமதாகக் கொடுப்பதைத் தவிர்த்தல், அவர்கள் இரவு உணவை அடம்பிடிக்காமல் சாப்பிடுவார்கள்.


 குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் வீட்டில் செய்த ஸ்நாக்ஸ் இருந்தால் அவர்களுக்கு நல்லதாகும்.


 அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை இரவு உணவாகக் கொடுப்பதைத் தவிர்க்கலாம், அதற்கு காலை நேரத்தில் அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடக் கொடுக்கலாம்.


 அதே போல் அவர்களுக்கு கலோரி நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.


 மேலும் தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன் இரவு உணவைக் கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் எளிதாக செரிமானம் ஆகிவிடும். குழந்தைகள் தூங்கச் செல்வதற்கு முன் ஒரு மணி நேரம் விளையாட வைத்த பிறகு தூங்க வைக்கலாம்.


 தூங்குவதற்கு அதிக நேரம் எடுக்கும் குழந்தைகளை வற்புறுத்தித் தூங்க வைக்கக் கூடாது. குழந்தைகள் தூங்கச் செல்லும்முன் பால் அல்லது தண்ணீர் குடித்து 30 நிமிடங்கள் கழித்து அவர்களை தூங்க வைக்கலாம்.


குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது :


 குறைவாக சாப்பிடும் குழந்தைகளைச் சாப்பிட வைக்கும் போது நாமும் சேர்ந்து மெதுவாகச் சாப்பிட்டால், நாம் சாப்பிடும் நேரம் வரை குழந்தைகளும் அமைதியாக சாப்பிடுவார்கள்.


அதிகமாகச் சாப்பிடும் குழந்தைகளுக்கு சாப்பாட்டை குறைவாகக் கொடுப்பதைத் தவிர்த்து, உணவுக்கு ஏற்ற அளவான தட்டில் கொடுக்கலாம். மேலும் சாதம் சாப்பிடாத குழந்தைகளுக்கு, உணவை மசித்து ஊட்டி விடலாம். 


குழந்தைகளுக்கு இரவு உணவுகள் :


 குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் பருப்புச் சாதத்துடன் சிறிது நெய் ஊற்றிக் கொடுக்கலாம். மேலும் காய்கறிகளைத் தனியாகக் கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள். அவர்களுக்கு இட்லியுடன் சேர்த்து மசித்து சாப்பிடக் கொடுக்கலாம்.


தானியங்களில் செய்யப்பட்ட உப்புமா, இட்லி, தோசை, போன்றவற்றைப் புதினா, தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்துக் கொடுக்கலாம். மேலும் அதிக எடை உள்ள குழந்தைகளுக்கு கோதுமை ரவை, சம்பா கோதுமை ரவை உப்புமா, சப்பாத்தி போன்றவற்றைக் கொடுக்கலாம்.


 எலுமிச்சைப் பழத்தின் தோலில் இவ்வளவு நன்மைகளா!!

எலுமிச்சையில் அதிக கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது தாகத்தைப் போக்க உதவும் பானமாகவும் மற்றும் பலவித மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள பழமாகவும் உள்ளது. எலுமிச்சைப் பழத்தைப் போல எலுமிச்சைப் பழத்தின் தோலிலும் ஏராளமான நன்மைகள் உள்ளது.


 எலுமிச்சைப் பழத்தின் தோலில் வைட்டமின் ஏ, சி, பீட்டா கரோட்டின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. மேலும் எலுமிச்சைப் பழத்தோல் ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படுகிறது.


எலுமிச்சைப் பழத்தோலில் உள்ள நன்மைகள் :


 பாத்திரத்தில் தேவையான அளவு வெந்நீர் ஊற்றி, அதில் எலுமிச்சை தோலைப் (எலுமிச்சை தோலின் உட்புறத்தில் உள்ள வெள்ளை தோலை நீக்கி) போட்டு 15 நிமிடங்களுக்கு பின் வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால், செரிமான மண்டலம் வலிமையாகி, உடல் எடை குறையும்.


 எலுமிச்சைப் பழத்தின் தோலின் மூலமாக செய்யப்படும் டீயை தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள ஹைட்ரஜன் அளவைச் சீராக்கி, கல்லீரலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


 நமது நகங்களை 15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, பின் எலுமிச்சைத் தோலை நகங்களின் மேல் 30 வினாடிகள் தேய்த்து பின் கழுவினால், நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து விடும்.


 எலுமிச்சைப் பழத்தின் தோலை பற்களில் தேய்த்து வாய் கொப்பளித்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் நிறமும் மறைந்து விடும்.


 எலுமிச்சைத் தோலை துருவி, ஸ்பிரேயர் உள்ளே போட்டு அதனுடன் ஒயிட் வினிகரை சேர்த்து 2 வாரம் கழித்து, அதை அனைத்து இடத்திலும் சுத்தம் செய்யும் மருந்தாக பயன்படுத்தலாம்.


 எறும்புகள், கரப்பான் தொல்லை போன்ற பூச்சிகளைத் தடுக்க சாக்பீஸ் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எலுமிச்சைப்பழத் தோலை பயன்படுத்தலாம்.


 எலுமிச்சைத் தோலை வெயிலில் உலர்த்தி நன்றாக காய்ந்தவுடன் பொடித்து அதனுடன் தேன், சர்க்கரை, ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவு பெறும்.


 சிலருக்குக் கை, கால் முட்டிகளில் கறுப்பாக இருக்கும். அவர்கள் எலுமிச்சைத் தோலை கருமையான இடங்களில் தேய்த்துவர, கருமை நீங்கி, நல்ல பலன் கிடைக்கும். மேலும், இது சருமத்துக்குப் பளபளப்பையும் தர வல்லது. எலுமிச்சைப்பழத் தோலில் உள்ள எண்ணெய், நறுமணத் தைலங்கள் தயாரிக்க உதவுகிறது.


Thanks and regards 

A s Govinda rajan 

17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai