அவனிடம் சிறிது நேரம் மௌனம்.

 

" என்னாச்சு..... சொன்னால்தானே தெரியும்? "

 

" சொல்றதுக்கு" />

tamilnadu epaper

நண்பேன்டா

நண்பேன்டா

அடுத்து வரும் சவாரிக்காக ஆட்டோவுடன் காத்திருந்தபோது 

 செல்போன் ஒலித்தது. எடுத்தேன்.

 எதிர் முறையில் ரமேஷிடமிருந்து அழைப்பு.

 

" சொல்லு ரமேஷ்!"

 அவனிடம் சிறிது நேரம் மௌனம்.

 

" என்னாச்சு..... சொன்னால்தானே தெரியும்? "

 

" சொல்றதுக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கு!" 

 

" பரவாயில்லை... சும்மா சொல்லு!"

 

 அடுத்து ரமேஷ் சொன்ன விஷயத்தைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன். அவனுக்குள் இப்படி ஒரு ஆசையாi? இது நான் கொஞ்சமும் அவனிடமிருந்து எதிர்பார்க்காதது!

ஒரு திருநங்கையை நான் அவன் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமாம்!

 

 " ச்சே.,.ரமேஷ் இவ்வளவு மட்டமான ரசனை உள்ளவனாக இருக்கிறானே என்று நினைத்தபோது அவன் மேல் வெறுப்பாக இருந்தது. அவனை என் நண்பன் என்று நினைக்கவே.

கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது .

 

 ரமேஷ் எனக்கு பல சந்தர்ப்பங்களில் நிறைய உதவிகள் செய்திருக்கிறான்.அதனால் மறுக்க முடியவில்லை . வேண்டா வெறுப்பாக அவனிடம்.." இத பாரு ரமேஷ்.. இந்த ஒரு தடவை மட்டும் தான்... அடிக்கடி இப்படி கேட்கக்கூடாது... !" கடுமையாகவே சொன்னேன்.

 

 "ஓகே"என்றான்'

 

 என் ஆட்டோவில் எப்போதாவது சவாரிக்கு வரும் ஒரு திருநங்கையை பேசி சம்மதிக்க வைத்து மறுநாள் ரமேசின் வீட்டு வாசலில் இறக்கி விட்டு விட்டு 

 அவனைப் பார்க்க கூட மனமின்றி ஆட்டோவைக் கிளப்பி

 கொண்டு வந்தேன்.

       * * *

 

 ஒரு வாரம் கழித்து-

 

 சுபா ஆட்டோவில் வந்து ஏறினாள்.

 அவளை நமட்டு சிரிப்போடு பார்த்தேன்.

 

" என்ன சுபா அன்றைக்கு ரமேஷோடசெம ஜாலியா? " நக்கலாக கேட்டேன்.

 

" அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்கண்ணா "

 

" ரமேஷ் என் பிரண்டு தான். ஆனாலும் அவனுக்குள்ள இப்படி ஒரு ஆசை இருக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல!"

 

" நீங்க நினைக்கிற மாதிரி அவரு அந்த மாதிரி தப்பும் எதுவும் பண்ணலை...... நானும் உங்களை மாதிரி தான் அந்த எண்ணத்தில் தான் போனேன்.

 ஆனா அவர் அப்படிப்பட்டவர் இல்லைன்னு போன பிறகு தான் தெரிஞ்சது.!"

 

 நான் அவளை புதிராகப் பார்த்தேன்.

 

" வேறு எதுக்காக உன்னை வர சொன்னானாம்? "

 

" ரமேஷ்க்கு ஒரு அக்கா இருந்தாங்களாம். அவங்க திருநங்கையா மாறி இருக்காங்க...

 இந்த விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சதும் வீட்டை விட்டு வெளியேறி எங்கேயோ போயிட்டாங்களாம்..... இப்போ வரைக்கும் அவங்கள பார்க்க முடியலையாம்.... நான் போன அன்றைக்கு அவங்களோட பிறந்தநாளாம். அவங்களோட ஞாபகமா எனக்கு புடவை துணிமணிகள் எல்லாம் எடுத்து கொடுத்து கையில் செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்துட்டு..

 விஷயத்தைச் சொல்லிட்டு . வாய்விட்டு அழுதாரு.... பார்க்க ரொம்ப பாவமா இருந்துச்சு...!"

 என்றாள்.

 

   ரமேஷை பற்றி நான் தவறாக புரிந்து கொண்டதை நினைத்து இப்போது நான் வெட்கி தலைகுனிகிறேன்.

******************************************

 

 ஜி. சுந்தரராஜன் 

 479 வடக்கு ரத வீதி 

 திருத்தங்கல் -626130