ஆசைப்படு
அது பொதுவானது,
விரும்பியது கிடைக்கலையா
கிடைத்ததை விரும்பிவிடு ,
நிறைய யோசி
நட்போடுஉறவை நேசி
நல்லவைகளை சுவாசி ,
கொடுத்து மகிழ் கெடுத்து மகிழாதே!
உழைப்பே உயர்வு தரும்
சோம்பல் தவிா்,
கோபம் குறை'
கிடைக்கும் வாழ்வில் நிறை"
போடப்படும் திறை விலக்கு ,
தடங்கலை தாண்டு,
இலக்கை நோக்கு ,
வெற்றியை அடை,
வேற்றுமை தவிா் ஒற்றுமை பகிா் ,பகட்டை விடு,
ஓடு,ஓடு,
கால்கள் ஓயும் வரை ஓடுஉழைப்பை நோக்கி ஓடு
எதையும் பேசட்டும் சமுதாயம்
கவலை தவிா்
கடமையைச்செய்
இந்த தீபாவளித்திருநாளில் வேற்றுமை களைந்து ஒற்றுமை நிலவ பாடுபடு அதுவே நல்லது அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க பாடுபடு அதுவே மகிழ்வான தீபாவளி
நம்பிக்கை ஒளி ஏற்று
ஏணியாய் இரு
பரமபத விளையாட்டின் பாம்பாய் மாறாதே தீமை விலக்கு
வாய்மையே வெல்லும்
-ச.சிவசங்கரிசரவணன் செம்பனாா்கோவில்