வந்தவாசி, மே 21;
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத ஶ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கோவிலில் நேற்று 12 ஆம் ஆண்டு அன்னக்கூடை திருப்பாவாடை வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மூல மூர்த்திகள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு மலர் மாலைகள் சாற்றப்பட்டு மகா தீபாராதனை நடந்தேறியது. பிறகு வடித்த அன்னம், இனிப்பு, கார வகைகள் படையலிட்டு அன்னக்கூட திருப்பாவாடை உற்சவம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தலைமை அர்ச்சகர் ராஜன் ஸ்வாமிகள் அவர்களால் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
-பா. சீனிவாசன்,
வந்தவாசி.