" புதிய பளபளக்கும் காரில் வந்து தச்சர் கந்தசாமி வீட்டு வாசலில் இறங்கினான் ,உயரமான ஒல்லியான உறுதியான உருவம் , பேன்ட் - ஷர்ட்
போட்டு வசீகரமாக வந்த ராகுலுக்கு வயது முப்பத்திண்டு இருக்கும் ..."
" கந்தசாமி ஐயா ... கந்தசாமி ஐயா என்று அழைத்தான் . பேன்ட் பாக்கெட்டில் கையை நுழைத்த வண்ணம் . "
" வெள்ளை முடி வெள்ளை வேட்டி பனியன் துண்டு சகிதமாய் , கண்ணாடி அணிந்த பெரியவர் கந்தசாமி வெளியில் வந்தார் .
வணக்கம்... கந்தசாமி ஐயா .... என் பெயர் ராகுல் நான் சென்னையில் சொந்தமா கம்பெனி வெச்சிருக்கேன் , உங்க திறமை உழைப்பு நாணயம் பற்றி கேள்விப்பட்டு இருக்கேன் என்றான் ராகுல் .
பதிலுக்கு வணக்கம் சொல்லி ராகுலை நிதானமாக பார்த்து விபரம் கேட்டார் கந்தசாமி .. "
என் கம்பெனிக்கு வேண்டிய பர்னிச்சர் லிஸ்ட்டு இதுல இருக்கு இந்தாங்க என்று ஒரு கவரை கந்தசாமி கையில் திணித்தான் , அதில் அச்சாரமாய் ஐம்பதாயிரம் ரூபாய் இருக்கு மீதி பணம் ஒரு மாதத்தில் கொடுத்து விடுகிறேன் ஆனால் வேலையை அழகா கொடுக்கற காலத்துக்குள்ள முடிச்சு கச்சிதமா கொடுத்துடனும் என்றான் ராகுல் .
" சரி என்பதாய் தலையாட்டிய கந்தசாமியிடம் சரி ... ஐயா ஒரு மாதம் கழித்து வருகிறேன் என்று விடை பெற்ற ராகுல் வாசலில் தண்ணீர் குடத்தோடு வந்த அழகு ராணி ரம்யாவை மனம் உருக பார்த்து விட்டு காரில் ஏறினான் .
வரிமேடு கிராமத்தில் கந்தசாமி ஆசாரின்னா தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது அறுபது வயது கடந்த முதியவர் நல்லவர் நாணயமானவர் . வரும் தன் வருமானத்தில் கோவிலுக்கு , முதியோர் - அனாதை இல்லம் என கொடுத்துவிட்டு தன் குடும்ப தேவைக்கு ஒரு பகுதியை வைத்துக் கொள்வார் .
" அவருக்கு - ஒரே மகள் ரம்யா கல்லூரி முடித்து வயது முப்பது திருமணத்துக்கு நின்றாள். மனைவி மரகதம் இல்லத்தரசி.
" மர வேலைப்பாடு என்றால் கை வந்த கலை முப்பது வருஷ அனுபவம், லேட்டஸ்ட் டிசைன் வரை மர வேலைப்பாடு செய்யும் திறமைசாலி கந்தசாமி.
" எதுக்கும் உதவாதவன் என்று ஊரார் கிண்டலும் கேளியும் செய்த மாரி , குமார் , வினோத் , ராஜா , வினித் , விஜய் , விமல், ரவி , முத்து , மாரி , ஹரி , அருள் இப்படி பலரை தன் பட்டறைக்கு அழைத்து வந்து தொழில் கற்றுக் கொடுத்து திறமை வளர்ந்ததும் அவர்களுக்கு தனித்தனியாக தொழில் தொடங்க வழி செய்து வைத்துவிடுவார் நல்ல வெள்ளை மனம் படைத்த கந்தசாமி ..."
" ராகுல் பணம் கொடுத்து சென்ற இரண்டாவது நாளில் கந்தசாமிக்கு சிறிய விபத்தில் கால் முறிவும் , கை முறிவும் ஏற்பட்டுவிட்டது , காயம் குணம் ஆக ஒரு மாதம் ஆகும் என்று சொல்லிவிட்டார் கிராமத்து சித்த மருத்துவர் சிங்காரம் .
" செய்வது அறியாது வலியால் துடித்த கந்தசாமி முப்பது வருஷம் கட்டிக்காத்த நாணயம் கெட்டு விடுமே என்று தன் மகள் , மனைவியிடம் புலம்பினார் .
" இதை செவி வழியாய் கேள்விப்பட்ட முன்னால் பயிற்சி பெற்ற இளைஞர்கள் எதையும் விரும்பாத தன் ஆசானுக்கு நன்றிக் கடனாய் முடித்து தர முடிவெடுத்து கந்தசாமி வீட்டிற்கு வந்து ஒரு மாதம் தங்கி அனைவருமாக சேர்ந்து ராகுலின் ஆர்டரை முடித்துக் கொடுத்தார்கள் . கந்தசாமியும் ஒரு வழியாக இயல்பு நிலைக்கு வந்தார் .
ராகுல் வந்ததும் அவனிடத்தில் அனைத்து ஆர்டர் பொருளையும் சரி பார்த்து கொடுத்தார் கந்தசாமி . அப்போது ரம்யா மூலம் நடந்த விசயங்களை அறிந்து கொண்டான் ராகுல். நாணயம், உதவும் குணம் பற்றியும் , முன்னால் பயிற்சி பெற்ற இளைஞர்கள் செய்த உதவியை கேள்விபட்டு வியந்து பாராட்டினான் ராகுல் .
" மீதி பணத்தை தட்டில் வைத்துக் கொடுக்க வந்த ராகுல் நன்றி ஐயா என்றான் அது வெறும் நன்றி என்ற வார்த்தையாக இல்லாமல் கந்தசாமி ஆசாரியின் நாணயத்திற்கு பரிசாக ரம்யாவை மணக்க திருமண தாலிச்சங்கலியாக தட்டில் ஜொசித்து மின்னியது .
- சீர்காழி. ஆர். சீதாராமன் .
9842371679 .