tamilnadu epaper

நிகோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம் அதிரடியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி

நிகோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம் அதிரடியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி

லக்னோ, ஏப்.14: 

  ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் நிகோலஸ் பூரன், எய்​டன் மார்க்​ரம் ஆகியோரது அதிரடி​யால் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

லக்​னோ​வில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த குஜ​ராத் அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 180 ரன்​கள் குவித்​தது. கேப்​டன் ஷுப்​மன் கில் 38 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 6 பவுண்​டரி​களு​டன் 60 ரன்​களும், சாய் சுதர்​சன் 37 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 7 பவுண்​டரி​களு​டன் 56 ரன்​களும் விளாசினர். ஜாஸ் பட்​லர் 16, வாஷிங்​டன் சுந்​தர் 2, ஷேர்​பேன் ரூதர்​போர்டு 22, ராகுல் டெவாட்​டியா 0 ரன்​களில் நடையை கட்​டினர். ஷாருக் கான் 11, ரஷித் கான் 4 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

ஒரு கட்​டத்​தில் குஜ​ராத் அணி 12 ஓவர்​களில் 120 ரன்​கள் குவித்து வலு​வான நிலை​யில் இருந்​தது. இதனால் அந்த அணி 220 ரன்​களை வரை குவிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால் அதிரடி​யாக விளை​யாடி வந்த ஷுப்​மன் கில், சாய் சுதர்​சன் ஜோடியை அவேஷ் கான் 13-வது ஓவரின் முதல் பந்​தில் பிரித்​தார். தொடர்ந்து 14-வது ஓவரின் முதல் பந்​தில் சாய் சுதர்​சனை, ரவி பிஷ்னோய் ஆட்​ட​மிழக்​கச் செய்​தார். இந்த இரு விக்​கெட்​களும் பெரிய திருப்பு முனையை ஏற்​படுத்​தி​யது.

நடு​வரிசை​யில் வாஷிங்​டன் சுந்​தர், ஜாஸ் பட்​லர் ஆகியோரை முறையே ரவி பிஷ்னோய், திக்​வேஷ் ராத்தி ஆகியோர் விரை​விலேயே பெவிலியனுக்கு திருப்​பினர். பின்​வரிசை​யில் ரூதர்​போர்டு 19 பந்​துகளை எதிர்​கொண்ட போதி​லும் அவரால் பெரிய அளவில் தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொள்ள முடி​யாமல் போனது. ரூதர்​போர்​டை​யும், ராகுல் டெவாட்​டி​யா​வை​யும் ஷர்​துல் தாக்​குர் ஆட்​ட​மிழக்​கச் செய்து இறு​திப்​பகு​தி​யில் ரன் குவிப்பை வெகு​வாக கட்​டுப்​படுத்​தி​னார். கடைசி 8 ஓவர்​களில் குஜ​ராத் அணி​யால் வெறும் 60 ரன்​கள் மட்​டுமே சேர்க்க முடிந்​தது. லக்னோ அணி சார்​பில் பந்து வீச்​சில் ஷர்​துல் தாக்​குர், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும் திக்​வேஷ் ராத்​தி, அவேஷ் கான் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர்.

181 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் 19.3 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 186 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. தொடக்க வீர​ரான எய்​டன் மார்க்​ரம் 31 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 9 பவுண்​டரி​களு​டன் 58 ரன்​களும், நிகோலஸ் பூரன் 34 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 61 ரன்​களும் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தனர்.

தொடக்க வீர​ராக களமிறங்​கிய கேப்​டன் ரிஷப் பந்த் 18 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 21 ரன்​களும், டேவிட் மில்​லர் 7 ரன்​களும் எடுத்து ஆட்​டமிழந்​தனர். ஆயுஷ் பதோனி 20 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் நடப்பு தொடரில் 4-வது வெற்​றியை பதிவு செய்​தது.

அந்த அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 5-வது இடத்​தில் இருந்து 3-வது இடத்​துக்கு முன்​னேறியது. அதேவேளை​யில் தொடர்ச்​சி​யாக 4 வெற்​றிகளை பெற்​றிருந்த குஜ​ராத் டைட்​டன்ஸ் தோல்​வியை அடைந்​துள்​ளது. 6 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 4 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் இருந்து 2-வது இடத்​துக்கு இறங்​கி​யுள்​ளது. ஆட்​ட நாயக​னாக லக்​னோ அணி​யின்​ எய்​டன்​ மார்​க்​ரம்​ தேர்​வா​னார்​.