கடந்த காலத்தை
கண் முன் நிறுத்தினேன்
கலக்கம் வந்தது
எதிர்காலத்தை
எண்ணிப் பார்த்தேன்
பயம் வந்தது
நிகழ்காலத்தில்
வாழ்வது என்று
நிச்சயித்து விட்டேன்
கடந்த காலம்
திரும்ப வராது
எதிர்காலம்
சந்தேகமானது
இன்றைய நாள்
இனிய நாள்
கவலையை மற
களிப்புடன் வாழ்
****
வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்