tamilnadu epaper

நினைவுகளில் உறங்கட்டும் உயிர்

நினைவுகளில் உறங்கட்டும் உயிர்

அந்த வீட்டில் எந்த மாற்றமும் இல்லை அதே ஈஸி சேர் ஒரு சோபா ஒரு ரேடியோ பெட்டி ஒரு டேபிள் ஃபேன் சோபாக்கு பக்கத்தில் ஜன்னல்கள் ...


நடராஜன் தன் கால்களை ஒன்றும் மேல் ஒன்று போட்டுக் கொண்டு மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு கைகளத் தன் தலைக்குக் கீழ் வைத்துக் கொண்டு மூக்கு கண்ணாடி சரிய கண்கள் மெல்ல மூடியவாறு நினைத்துப் பார்க்கிறார்


நாம் அப்பாவாக இருந்தபோது இதோ அந்த சோபாவில் தங்கை ஹேமா தன் கனவுகளுடன் படிப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தது நிழலாடியது


தனது அப்பா (பேரக்குழந்தைகள் அவருக்கு)தன் குழந்தைகள் அஸ்வின் பத்மா இருவருக்கும் கதைகள் சொல்லி ஆனந்தமாக விளையாடியது நிழலாடியது


எனது மனைவியை அதே வீட்டில் இருந்தால் கூட அவளைக் கனவில் பார்ப்பதே அதிகம் ....இப்போது போலவே..


என்னதான் வேலை செய்வாளோ ....த்அடுப்படிதான் அவள் சாம்ராஜ்யம்


இது தவிர தன் தம்பி ரகு அவரது மனைவி ராஜி பூரணி பூரணா குழந்தைகள் ரெட்டையர் அவர்களுடன் அவன் ஹாலில் விளையாடி கொண்டிருப்பான் ...


அது என்ன வசந்த காலமோ அப்படி ஆனால் இது என்ன இலையுதிர் காலமோ


இப்போது நான் மட்டுமே இந்த வீட்டில் தனிமையாக.. இல்லை இல்லை..கடந்த காலத்தின் நினைவுகளுடன்....


இதை விட்டுவிட்டு பாதுகாப்பாக ஹோமிற்கு போகச் சொல்கிறார்கள் 


பாதுகாப்பு இருக்கும் ஹோம் இருக்குமா 


உயிர் போகும் உயிர் போகும் என்பது ஒருமுறை தானே


அது இந்த நினைவுகளிலேயே கரைந்து கரைந்து உருமாறட்டும்


இறைவா என்று தன் நினைவுகளில் இருந்து விடுபட்டார் நடராஜன்…



-K BANUMATHI NACHIAR

SIVAGIRI