ஏழ்மைச் சிரிப்பில்
சோகமான வசந்தம்!
வறுமைப் புன்னகையில்
வறட்சியின் ஈரம்!
பசிக்கும் பட்டினிக்கும்
பதறாத பக்குவம்!
உழைப்பில் மட்டுமே
உற்சாக உற்சவம்!
ஊதியம் வந்திட
உல்லாச கீதம்//
பற்றாக்குறை கண்டிட
பழைய சோற்று ராகம்!
பொழுது போக்கில்
காண்பதில்லை இன்பம்!
அழுது புரண்டு
தீர்ப்பதில்லை துன்பம்!
வியர்வைச் சொட்டில்
வருவதே ஆனந்தம்!
கள்ளமில்லா இந்த உள்ளங்கள்
காலத்தின் தேவைகள்!
பணமே குறிக்கோளாய் எண்ணி
வாழாத மேதைகள்!
-முகில் தினகரன்,
கோயமுத்தூர்