tamilnadu epaper

நான் ஓய்வெடுக்கும் நேரம்

நான் ஓய்வெடுக்கும் நேரம்


புறக்கணிக்கப்பட்ட வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன 

பூக்கள்


விருப்பப்படி வட்டமடித்து வரும் வண்ணத்துப் பூச்சிகள் 

வெவ்வேறு பூக்களில் அமர்கின்றன


மரத்தினடியில் நிழலாட 

சும்மா நிற்கும் மரங்களை 

கிச்சுக் கிச்சு மூட்டி விளையாடுகின்றன காற்றின் கைகள்


அங்காடிகளின் முதல் தளத்தில் குளிரூட்டப்பட்ட அறைகள் 

முழுவதுமாய் மூடப்பட்டிருக்கின்றன...


தார்ச்சாலையில் 

உச்சி நேரத்தில் 

ஆட்கள் வேலை செய்கிறார்கள்


மதிய உணவு இடைவேளையில் 

அணி வகுத்து நிற்கும் 

வாகனங்களை வழிமறித்துப் பசியூட்டுகின்றன சிவப்பு விளக்குகள்


நீலவானம் 

மேகங்களுக்கிடையில் 

மூடியும் மூடாமல் காட்சியளிக்கிறது


பரபரப்பில் சிதறித் தெறிக்கும்

கவிதைகள் 

நான் ஒய்வெடுக்கையில் வந்தமர்கின்றன.


-ம.திருவள்ளுவர்.